அதிரசம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி-2 கப்
வெல்லம்- 2 கப்
பொடித்த ஏலக்காய்- நான்கு
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
செய்முறை:-
# பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் நீரை வடிகட்டி நிழலில் உலர்த்தவும்
# மிக்ஸியில் பொடித்து சலிக்கவும்
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து வெல்லத்தை அதில் போட்டு அது மூழ்குமளவு நீர் ஊற்றறி பாகு காய்ச்சவும்
# பாகு கொதிக்க போது அதை வடிக்கட்டி ஏலப்பொடி சேர்த்து மறுபடியும் காய்ச்சவும்
# ஒரு தட்டில் குளிர்ந்த நீரை எடுத்து வைத்துக் கொண்டு, கொதிக்கும் பாகில் ஒரு சொட்டை எடுத்து அதில் ஊற்றினால் பாகு கையில் திரண்டு உருட்ட வரவேண்டும். இதுதான் சரியான பதம்
# பாகை இறக்கி வைத்து விட்டு, கொஞ்சம் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதிப்பாகில் மாவை கொஞ்சம் கொஞ்சமாகத்தூவி மாவை நன்கு கலக்க வேண்டும்.
# சப்பாத்திமாவை விட சற்று இளகலாக அதிரச மாவு இருக்க வேண்டும்
# பாகு தேவைப்பட்டால் எடுத்து வைத்துள்ள பாகை கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம்.
# இரண்டு நாட்கள் கழித்து மிதமான தீயில் அதிரசங்களைத்தட்டி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்
# மேலே ஒரு சின்ன கிண்ணம் வைத்து லேசாக அமுக்கினால் மிதமுல்ல எண்ணெய் வந்துவிடும்
*****
Comments
Ranj...
ஏன் , இது உகங்கள் முறையில் இல்லை. முன்பு ஒரு வருடம் முன் செய்யும் போது .
வெரும் இடியாப்ப மாவில் செய்யலாமா?
இதற்க்கு ஈரமாவு வேண்டும்...பச்சரிசியை மிக்சியில் பொடித்து பன்னினால் நன்றாக வரும் அக்கா...எங்கலுக்கும் அதிரசம் ரொம்ப பிடிக்கும் அதனால் அடிக்கடி பன்னுவேன்
இதற்க்கு ஈரமாவு வேண்டும்...பச்சரிசியை மிக்சியில் பொடித்து பன்னினால் நன்றாக வரும் அக்கா...எங்கலுக்கும் அதிரசம் ரொம்ப பிடிக்கும் அதனால் அடிக்கடி பன்னுவேன்