பூந்தி லட்டு
தேவையான பொருட்கள்:
முந்திரி -10
திராச்சை -10
ஏலக்காய்
பூந்திக்கு:-
கடலை மாவு -1 கப்
தண்ணீர் - 1 கப் +1 tsp
பாகுக்கு:-
சக்கரை -1 1/2 கப்
தண்ணீர் -1 கப்
செய்முறை:-
# சக்கரையையும் , தண்ணீரையும் வைய்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும் (கெண்டிதர்மா மீட்டர் இருந்தால் 220* F) அதில் ஏலக்காயை தட்டி போடவும்
# கூடவே இன்னெரு காடாயில் எண்ணெய் வைத்து காய வைக்கவும்
# கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும், கரண்டிவைத்து மேலே ஊற்றினால் அதுவே தானாக விலும் பதத்துக்கு இருக்க வேண்டும்
# பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து கரைத்த மாவை ஒரு கரண்டியால் ஊற்றவும்
# பூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது
# பதமாக வெந்ததும், பூந்தியை எடுத்து, சக்கரை பாகில் உடனே கொட்டவும், எல்லா பூந்தியையும் இதே மாதிரி பன்னவும்
# முந்திரி, திராச்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும்.
# கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.
# சுவையான லட்டு தயார்
Comments