ஈஸி கேசரி
தேவையானப்பொருட்கள்:
ரவா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 4 tsp
முந்திரிப்பருப்பு - 10
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1/4 tsp
கேசரி கலர் -சிறிது
செய்முறை:
@.ஒரு வாணலியில் 1 tsp நெய்யை விட்டு, அதில் ரவாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
@.அதே வாணலியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
@.அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும் அதில் கேசரி கலர் கலந்துவிடவும்
@.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்
@.ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்
@.நன்றாகக் கிளறிய பின் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்.
@.கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
@.சுவையான கேசரி தாயார்.
Comments