என் கல்லூரி நாட்களில் எல்லாம் எங்கு போனாலும் வித விதமா தோடு வாங்குவதே தான் என் வேலையே அதுவும் பெங்களூர் பக்கம் போன கேக்கவே வேண்டாம் அப்படியே அள்ளி எடுத்துட்டு வந்துடுவேன்...ஆனா அதுலே பாதி போடறதுக்கு முன்னாலேயே கானாமே போயிடும்..அப்பதான் இந்த தோடு பன்னும் ஆசையே வந்தது உடனே ஒரு கம்மல் எடுத்து அதை அக்குவேரு ஆணிவேற பிரித்து திரும்பவும் மாட்டினேன் ..அப்புறம் அட இவ்வளவு தானானு தோனுச்சு .... அப்புறம் என்ன நானும் கொஞ்சம் கத்துகிட்டேன் இல்லே :-)
ஆனா எல்லா பொருட்களையும் தேடி கண்டுபிடிப்பது வாங்க தான் கொஞ்சம் கஸ்டமா இருந்தது,அதுவும் USA-க்கு வந்ததுக்கு அப்புறம் எல்லா பொருட்களும் எளிதா கிடைக்கறது , திரும்பவும் ஆரம்பிச்சாச்சு,
கூடவே எங்க வீட்டு இளவரசியும் அவளுக்கு அவளே பிரேசிலட் பன்னுறா!!!! , (இப்பதான் 4 வயசை எட்டி இருக்கா) ....நீங்களும் பாத்து சொல்லுங்க எப்படி இருக்குன்னு

தோடு மாடல்-1
தேவையானப் பொருட்கள் :-

#.மணிகள் (பெரிய, சிறிய அளவுகளில்)
நான் இதற்க்கு ஜெட், கிறிஸ்டல் உபயோகித்து உள்ளேன்
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.

1.ஊசிகளை வளைப்பதற்கு
2.கம்பி வெட்டும் குரடு
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.அலங்கார பட்டை(ரெடிமேடாக கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கும்)
செய்முறை:-

#.முதலில் கிறிஸ்டல் மணியை அலங்கார பட்டையில் கோர்க்கவும்.
#.பிறகு ஊசியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி.

#. ஒரு நீளமான ஊசியில் ஒரு பெரிய பச்சை நிற மணியை கோர்க்கவும்
#.பிறகு ஊசியை தேவையான அளவு வளைத்து கொண்டு மீதியை வெட்டி விடவும் மணிகளுக்கு நெருக்கமாக வளைத்து விடவும்.

#.பின்பு பச்சை மணி கோர்த்ததை எடுத்து , கிறிஸ்டல் மணியிண் கீழ் மாட்டிவிடவும்

#.அதன் பின் அலங்கார பட்டையில் கொக்கியை மாட்டிவிடவும்
#.அழகான தோடு தயார்

Comments
உபயோகமாக இருக்கும்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
innikudhan unga valai pakkuaren ,ellamae arpudhamavum,easy avum iruku,i'm really impressed by ur site,keep it up...