கேரமல் ப்ருட் கேக்

கேரமல் ப்ருட் கேக்




தேவையானப் பொருட்கள்:-

வெண்ணெய் - 75 கிராம்
மைதா - 1 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - 1 tsp
பேக்கிங் சோடா-1/2 tsp
முந்திரி -10
திராட்சை-15
ட்ரை புருட்ஸ்(அல்லது) டூட்டி ப்ருட்டி- 2 tbs
வென்னிலா எசன்ஸ் - 1
ஆரஞ்சு தோல்- 2 tsp
ஜாதிகாய்தூள்-1/2 tsp
பால் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்(கேரமல் செய்வதற்கு)


செய்முறை:-

#.மைதாவில் பேக்கிங் பவுடர், சோடா, ஜாதிகாய்தூள் சேர்த்து ஜல்லடையால் அரித்து வைக்கவும்.

#.பலகலவையில் 1/2 tsp மைதா சேர்த்து கலந்து வைக்கவும்.

#.ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 tsp சர்க்கரையை போட்டு வறுக்கவும். அது டார்க் ப்ரெளன் நிறம் வந்ததும் 2 tsp நீர் சேர்த்து இறக்கி விடவும். கேரமல் தயார்.

#.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடிக்கவும்
அதில் சக்கரை போட்டு கலந்தபின் ,மைதா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மிருதுவாக மடக்கும்மாரு கலக்கவும்,அதில் எசன்ஸ் சேர்க்கவும்.

#.கவனம் ரொம்பவும் கலக்க்கி விடகூடாது.

#.கேக் கலவையுடன் கேரமல்,பழக்கலவை, பழைத்தோல் சேரும்படி மீண்டும் ஒன்றாக நன்கு கலந்துக் கொள்ளவும்.

#.பிறகு கேக் செய்ய்ம் பாத்திரத்தில் தயாறித்த கலவையை பரவலாக ஊற்றவும்
ட்ரேயின் பாதி அளவுக்கு நிரப்பவும். ட்ரெயின் ஒரு இன்ச் உயரத்திற்கு காலியாக விட வேண்டும்.

#.பின்னர் ஒடிஜியில் 350 f-ல் 40 நிமிடம் வரை பேக் செய்து கேக் வெந்ததும் எடுக்கவும்.
வெந்ததா என்பதை அறிவதற்கு மெல்லிய குச்சியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும் இதுவே கேக்கின் பதம்.

#.அடிக்கடி ஒவனை திறந்து பாக்ககூடாது.

Comments

Unknown said…
ஆஹா.. சூப்பர்..
நன்றி ஃபாயிஷா. :-)
Menaga Sathia said…
ஹாஹா மலர் எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க.சூப்பரா இருக்கு.
எல்லாம் திந்துடுச்சுங்க... அடுத்த முறை கண்டிப்பா அனுப்புரேன்.:-) நன்றி