பாவ் பாஜி மசாலா















தேவையான பொருட்கள்:-

உருளைக்கிழங்கு -2
கேரட் -1
பீன்ஸ் -10
பச்சைபட்டாணி -1/2 கப்
காலிஃளவர் -1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
குடமிளகாய் -1/2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 TBS
பாவ் பாஜி மசாலா- 1 TBS
மிளகாய்த்தூள்- 1 tsp
மஞ்சத்தூள் - 1/4 tsp
கரம்மசாலா- 1/2 tsp
எலுமிச்சைரசம் -1 TBS
கொத்தமல்லி -1/2 கப்
வெண்ணெய் -2 TBS
எண்ணெய் -1 TBS
சீரகம் -1/4 tsp
உப்பு - தேவைக்கு
பன்

























செய்முறை:-

#.உருளைகிழங்கின் தோலை நீக்கி கட் பன்னவும்.

#அதனுடன் எல்லாக் காய்களையும் சேர்த்து குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்

#.ஆறிய பின் ஒன்ரும் பாதியுமாக மசித்து வைக்கவும்.

#.வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

#. ஒரு பேனில் வெண்ணெய், எண்ணெயை கலந்து ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டவும்.தொடர்ந்து வெங்காயம், போட்டு நன்கு வறுக்கவும்.

#.பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

#.தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

#.அத்துடன் எல்லாத்தூளையும் போட்டு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

#பிறகு மசித்த காய்களைப் போட்டு நன்கு கிளறி கால் கப் நீரை ஊற்றி அனலைக் குறைத்து வைக்கவும்.

#.மசாலா நன்கு கலந்து கெட்டியாக ஆனதும், எலுமிச்சைரசத்தை விட்டு கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு இறக்கி விடவும்.

# விருப்பம் இருந்தால் கொஞ்சம் பெரிய(வெள்ளை) வெங்காயத்தை பொடி பொடியாக கட் பன்னி மேலே போடவும்

#.பிறகு பாவ்/பன்னை இரண்டாக கட் பன்னி சூடான தோசைகல்லில் வெண்ணெயைத் தடவி லேசாக சுடவும்

#.தயாரித்த மசாலாவுடன் சூடாக பரிமாறவும்.

Comments

Unknown said…
பாவ் பாஜி மசாலா ரொம்ப சூப்பராக இருக்கு..
நன்றி பாயிஷா.... :-) .
Menaga Sathia said…
பார்க்கவே சூப்பரா இருக்கு.
நன்றி மேனகா... சுவையும் ரொம்ப நல்லா இருக்கும். :-)