தேவையான பொருட்கள்:-
சின்ன வெங்காயம்- 1 கப்
தக்காளி - 2
துவரம் பருப்பு -1 கப்
புளி சிறிது
பெருங்காயம்
எண்ணெய் - 2 tsp
கடுகு
கருவேப்பிலை சிறிது
கொத்தமல்லி தலை
அரைக்க தேவையானவை:-
தனியா -2 tsp
கடலை பருப்பு- 1 tsp
தேங்காய் துருவல் -4 tsp
சீரகம் - 1tsp
மிளகு- 1tsp
வெந்தயம் - 1tsp
சிவப்பு மிளகாய் - 3
செய்முறை:-
@. துவரம் பருப்பை குக்கரில் 2 விசில் வேக வைக்கவும்.
@.வெரும் கடாயில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
@.வருத்ததை கரகரப்பாக அரைக்கவும்
@.வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் வதங்கியபின்,
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்
@.தக்காளி வதங்கியபின் புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து அதில் வேக வைத்த பருப்பை போடவும்
@.பின்பு அரைத்த விழுதை பருப்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
@.கொத்தமல்லி தூவி இறக்கவும்
Comments