பவுன்ட் கேக்













எல்லா பொருட்களும் சம அளவு போட்டு பன்னுவது தான் இந்த கேக்கின் ஸ்பெசல்.

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு- 1 1/2 கப்
பேக்கிங் பவுடர்- 2 1/2 tsp
சால்ட் - 1 tsp
வெண்ணெய்- 3/4 cup (1 1/2 sticks)
சக்கரை- 1 1/2 கப்
முட்டை - 3
வென்னிலா எஸென்ஸ்- 1 tsp


செய்முறை:-

@.வெண்ணெயை room temperature-ல் இருக்கவேண்டும்

@. அது மிருதுவான பதத்துக்கு வரும்போதுதான் கேக் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

@.மாவையும் பேக்கிங் பவுடரையும் கலந்து மூன்று முறை சலிக்கவும்.
















@.முட்டைகளை தனியாகப் பிரித்தெடுக்கவும். முதலில் முட்டை வெள்ளைகளை சிறிதுகூட மஞ்சள் கரு கலப்பில்லாது எடுத்து
பிறகு அவற்றை electronic beaterல் நன்கு அடிக்கவும்.














@. அடிக்க அடிக்க முட்டை வெள்ளை கட்டித் தயிர்போல திரண்டு வரும். இறுதியில் கட்டியா தயிர் பதத்தில் வர வேண்டும்.












@.ஒரு பாத்திரம் எடுத்து இளகலான வெண்ணெய், மஞ்சல்கரு,சக்கரை அடிக்கவும். அதில் மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கலக்கும் வரை அடிக்கவும்

@. அதில் எசன்ஸ் சேர்க்கவும்












@.பிறகு முட்டை வெள்ளையை மூன்று பிரிவாக பிரித்து அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒரு ஸ்பாட்டுலாவால் மிருதுவாக கலக்கவும். ரொம்ப கலக்கிவிடகூடாது.












@.பின்பு ஒரு பேக்கிங் ட்ரேயில் ஊற்றி வைக்கவும்

@.ஏற்கனவே சூடாக்கப்பட்ட அவனில் வைத்து 350 டிகிரி F-யில் சுமார் 45 நிமிடங்கள் வேக வைக்கவும்.

@.பிறகு 10 நிமிடங்கள் கழித்து ஆற பின் விரும்பிய வண்னம் துண்டுகள் செய்யவும்.

Comments

Unknown said…
ரொம்ப பொருமையாக கேக் அழகாக செய்து இருக்கிங்க..
ஆமாங்க எனக்கு Baking ரொம்ப பிடிக்கும்...அதுவும் இல்லாமே இங்கே வெளியே வாங்கும் கேக்விட வீட்டில் செய்யும் கேக்தான் ஹர்ஷினிக்கும் ரொம்ப பிடிக்கும்
Anonymous said…
pakkavay sapdanum pola irukunga solirundhingana vandhurupean. cha miss panitean.
GEETHA ACHAL said…
மிகவும் அருமையாக இருக்கு. இதற்கு கண்டிப்பாக வெனிலா சேர்க்க வேண்டுமா…இந்த வீக் கென்டு உங்களுடைய கேக் மற்றும் popover தான் செய்ய வேண்டும் என்று உள்ளேன்.
நன்றி கீதா அப்படியே எனக்கும் கொஞ்சம் அனுப்புங்க... :-)

வெணிலா சேர்க்கவிடால் முட்டை வாசம் கொஞ்சம் இருக்கும்... இதற்க்கு பதில் வேற எந்த எசன்ஸ் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

popover ரொம்ப ஈசி மேபில்சிரப்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.