முட்டை குருமா















தேவையானவை:-

முட்டை - 6
வெங்காயம் - 1
தக்காளி -1
இஞ்சி , பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம்மசாலாதூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

அரைக்க:-

தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10


செய்முறை:-


@.முட்டையை வேகவைத்து ஓடு உறித்து வைக்கவும்.

@.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம்,இஞ்சி , பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்

@.பச்சைவாடை போனதும் மிளகாய், கறிவேப்பிலை , தக்காளி சேர்த்து நங்கு வதக்கவும்.

@. மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலாதூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

@. அரைத்த விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

@.முட்டையை பாதியாக வெட்டி கொதித்த கலவையில் சேர்த்து கலக்கவும்.

@.குறைந்த தனலில் கொதிக்க விட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.





*.

Comments

Menaga Sathia said…
கலக்கிட்டிங்க ஹர்ஷினி அம்மா!!
நன்றி மேனகா..... ஆனா கொஞ்சமா தான் கலக்கினேன் ரொம்ப கலக்கின முட்டை உடைந்துவிடும் :-)
Unknown said…
ஹர்ஷினி மிகவும் நல்லாயிருக்கு. இது எதனுடன் சாப்பிட்டால் நல்லாயிருக்கும்.
நன்றிபா... இது பிரியானிக்கு நல்லா இருக்கும் சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்லா இருக்கும் , முந்திரி இருப்பதால் குழந்தைகலுக்கு ரொம்ப பிடிக்கும் .
Unknown said…
ரொம்ப நன்றி ஹர்ஷினி
Menaga Sathia said…
குறும்பு ஹர்ஷினி அம்மா!!
என்னப்பா பன்னறாது கோயபுத்தூர் காரங்கலே கொஞ்சம் அப்படிதான் :-)