உளுந்துவடை, தயிர் வடை















தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1 tsp
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகு - 2 tsp
உப்பு - ருசிக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு
தயிர் - 2 கப்

அலங்கரிக்க:

சீரகதூள்
காராபூந்தி - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக மை போல் தண்ணீர் விடாமல் அரைக்கவும். .

அரைத்த மாவுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய்,மிளகு, உப்பு போட்டு கலக்கவும்.















தயிரை நன்றாகக் கடைந்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இலேசாக விரல்களால் அழுத்தி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.







சாம்பார், சட்னியுடன் பரிமாறவும்.









தயிர் வடை



பொரித்தெடுத்த வடையை குளிர்ந்த நீரில் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து இலேசாக கைகளால் அழுத்தி அதிலுள்ள நீரை அகற்றி விட்டு தயிரில் போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும்.





பரிமாறும் முன் அதன் மேல் காராபூந்தி, கொத்துமல்லித் தழைத் தூவி பரிமாறவும்.

Comments

Unknown said…
தகி வடை ஹைதராபாத்தில் ரொம்ப பேமஸ். ஆனால் இங்கே கடலைமாவில் செய்வாங்க. இது புதுசாக இருக்கு.பார்க்கவும் அழகாக இருக்கு..
நன்றி Faiza....கடலைமாவுலே நான் கேள்விபட்டது இல்லைபா... எங்க ஊர்பக்கம் எல்லாம் ஊளுந்துலே தான் செய்வாங்க...அதுவும் பெண்களுக்கு நல்லதுனு அடிக்கடி எங்க வீட்டுலே செய்வாங்க.
Menaga Sathia said…
உங்க ப்ரெசண்டேஷன் ரொம்ப அழகா இருக்கு ஹர்ஷினி அம்மா.
நன்றி மேனகா.... :-)
Jaleela Kamal said…
ஹர்ஷினி இதை மோரில் தோய்த்தால் இன்னும் ருசி அதிகமாக இருக்கும்.
எனக்கும் உளுந்துவடை ரொம்ப பிடிக்கும் அம்மா சின்னவயதில் ஞாயிறு டிபனுக்கே இதை போட்டு கொடுப்பர்கள். சட்னி, நான் சர்கரை தொட்டு சாபிடுவேன்.
என் பையனுக்கு தயிர் வடை ரொம்ப பிடிக்கும். நோன்பு காலம் மற்றும், கேடையில் செய்வேன்.
ரொம்ப நல்ல இருக்கு பார்க்கவே.



ஜலீலா
ஆஹா ஜலீலா அக்கா சமையல் சிரகல் உங்ககிட்டே இருந்து பாராட்டா!!!! நன்றி அக்கா....

வடையை முதலிலே தண்ணீரில் நனைத்து பின் மேரில் சேர்ப்பதால் கொஞ்சம் லெட்டாதான் இருக்கும் அக்கா..