இறால் மசாலா



தேவையான பொருட்கள்

இறால்
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் -
மஞ்சள்தூள்
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாரு- 1 தேக்கரண்டி




செய்முறை

#.சுத்தம் செய்த இறாலுடன், மஞ்சள்தூள்,மிளகாய் தூள், கரம்மசாலா தூள்,சீரகத் தூள்,எலுமிச்சை சாரு,உப்பு எல்லாம் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

#.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

#.பின்பு அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

#.அதனுடன் இறாலை சேர்த்து 3 நிமிடம் வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி வேக விடவும்.

#.சூடாக பறிமாறவும்




#.

Comments

Menaga Sathia said…
வாவ் சூப்பரா இருக்கு,ஆனால் எனக்கு இரால் பிடிக்காதுப்பா அதுக்கு பதில் எனக்கு கறி சமைத்துக் குடுங்க.ஒரு பிடி பிடிக்க வரேன்.
எனக்கும் அவ்வளவா பிடிக்காதுபா ஆனா சமைக்க பிடிக்கும்... அதுக்கு என்ன தராளமா வாங்க... உங்களுக்கு இல்லத்தா!!!!