சுரக்காய் மோர்குழம்பு




தேவையானப் பொருட்கள்:

மோர் - 2 கப் (திக்காக இருக்கவேண்டும்)
சுரக்காய் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

துவரம் பருப்பு, தனியா, சீரகம், அரிசி அகியவற்றை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின்னர் தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுரக்காய் போட்டு அதில் உப்பு,மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும்.

காய் வெந்தப்பின் அரைத்த கலவையை அதில் சேர்க்கவும்.

பின் மோர் சேர்த்து 1 நிமிடத்தில் அடுப்பை அனைத்து விடவும்.



ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து அதை மோர்குழம்பில் கொட்டவும்.

சுவையான மோர் குழம்பு சூடான சாதத்திற்க்கு அப்பளம் வடகம்முடன் சாப்பிட சுவையாக இருக்கும்.





*****

Comments

Unknown said…
அடிக்கின்ற வெயிலில் எங்க வீட்டில் அடிக்கடி மோர் குழம்பு தான் செய்கிறேன். ஒரே மாதிரி சாப்பிட்டு போர் தான்.. இதை போல் செய்து பார்க்கிறேன்..
ஆமாம் Faiza வெயிலுக்கு நல்லா இருக்கும்..... சென்னைய் வெயில் எப்படி இருக்கு?, எல்லாம் செட் ஆயிடீங்களா?
Unknown said…
வெயில் தான் அதிகம். வீடு செட்டாச்சு
GEETHA ACHAL said…
மிகவும் அருமையான குறிப்பு.நன்றாக இருக்கு.
நன்றி கீதா :-)
ஹர்ஷினி இதுவரை நான் சுரைக்காயில் கூட்டு தான் செய்திருக்கேன். நேற்று வாங்கியுள்ளேன் இந்த வாரம் ஒரு நாள் செய்யலாம் என்று நினைத்திருக்கேன் செய்தபின் மீண்டும் சொல்கிறேன்.
விஜி இங்கு கிடைக்கும் கொஞ்சம் நம்ம ஊரு காய்களை என்னலெல்லாம் பன்னலாமோ எல்லாமே செய்யவேண்டியது தானே...என்னவருக்கும் இது ரொம்ப பிடிக்கும்...நன்றி விஜி. :-)