தேவையானப் பொருட்கள்
பிரட் - 1
பால் - 2 கப்
முட்டை - 6
சர்க்கரை - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 tsp
திராட்சை - சிறிது
பிரவுன் சுகர் - 2 தேக்கரண்டி
செய்முறை:-
@.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை நன்கு அடித்துக்கொள்ளவும். அத்துடன் பால், எசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி கஸ்டட் ஆக்கவும்.
@.பிரட்டை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
@.வெட்டிய பிரட்டை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் போட்டு, அதில் முட்டை கலவையை (கஸ்டட்)ஊற்ற வேண்டும்.
@.1/2 மணி நேரம் பிரிஞ்ஜில் வைக்கவும்.... பிரட் கஸ்டடில் நன்றாக ஊறிக்கொள்ளும்
@.பின் அதன் மேல் திராட்சைகளை தூவவும். அத்துடன் பிரவுன் சுகரினையும் மேலே தூவி ஓவனில் வைத்து 350 டிகிரி Fல் சுமார் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.
@.பேக் ஆனதும் புட்டிங் நன்றாக பொங்கி வந்து இருக்கும்.
@.இதை சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
***** .
Comments