நிப் பெயிண்டிங்




நிப் பெயிண்டிங் ஒரு வகையில் எம்ராய்டரி போல தான்...இதற்க்கு பொருமை ரொம்ப வேனும் :-) ...பூக்கள் பறவைகள் நிப் பெயிண்டிங்க்கு ஏற்றவை........ஒரு பூ வரைய 4 மணி நேரம் ஆகும் ... அது காய 10 நாள் ஆகும்... அதனால் ஆரம்பிக்கும் போது மேலேஇருந்து ஆரம்பிக்கவும் ...முதலில் ஒரு பூ வரைந்துவிட்டால் அப்புறம் ரொம்ப ஈஸியாக தான் இருக்கும் :-)

தேவையான பொருட்கள்:-

கருப்பு வெல்வெட் துணி
ஆயில் கலர்கள்
நிப் பெயிண்டிங் செட்
-நிறைய வகைகளில் கிடைக்கும், இது பார்ப்பதற்க்கு இங்க் பேனா நிப் போல இருக்கும்

செய்முறை:-

#.முதலில் துணியில் பிடித்த டிசைனை வரைந்துக் கொள்ளவும்.

#.இதற்க்கு வெள்ளை நிறம் பெயிண்ட் அதிகமாக தேவைபடும்.

#.எல்லா பூக்களுக்கும் முதல் வெள்ளை கலரில் இருந்து ஆரம்பிக்கவும்.



#.ஒரு துளி பெயிண்ட் எடுத்து அதை இட கை ஆள்காட்டி விரலில் வைக்கவும்
அதில் இருந்து ஒரு சின்ன துளி எடுத்து நிப் உதவியால் பால் போல உருட்டி அதை ஒரு புள்ளி போல வைக்கவும்.



#. கொஞ்சம் பொருமையாக ஒவ்வொரு இதலாக வரையவும்.




#.எல்லா பூக்களையும் முடித்த பின் இலைகள் வரையவும்.



#.படம் முடிந்தபின் 10 நாள் கைபடாத இடத்தில் வைக்கவும்



#.நிப் பெயிண்டிங் எப்படி இருக்குனு பாருங்க




^^^^^

Comments

Unknown said…
ஹர்ஷினி ரொம்ப நல்லாயிருக்கு. நானும் ஒரு பெயிண்ட் செய்தேன்.பிரேம் செய்ய கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது இன்னும் வரல.. இந்த பெயிண்டிங்கை பார்த்த பின்பு அந்த பெயிண்ட் ஞாபகம் வருது..
Menaga Sathia said…
செம சூப்பரா இருக்கு ஹர்ஷினி இந்த பெயிண்ட் ஒர்க்,ரொம்ப பொருமை வேனும் போல.
நன்றி Faiza...ஆமாம்ப்பா என் கிளாஸ் பெயிண்டிங் ஒன்னும் அப்படிதான் 4 வருசமா பிரேம் ஆயிட்டே இருக்கு :-(
ஆனா இங்கே ரெடிமேடா எல்லா சைசிலையும் பிரேம் கிடைக்கும்... அதனாலே உடனே பிரேம் போட்டுவிடுவேன்... இல்லைனா அதற்க்கு நேரமே வராது. :-)
/ரொம்ப பொருமை வேனும் போல./

ஆமாம் மேனகா கொஞ்சம் பொருமை வேனும்.....ஆனா நானே பன்னிட்டேன் அப்படினா பாத்துக்குங்கலே!!!!
GEETHA ACHAL said…
மிகவும் பொருமையாக செய்து இருக்கிங்க..
பார்க்கவே அழகாக இருக்கு. அற்புதம்.
நன்றி கீதா :-).
Ranj... said…
It is bright n beautiful...u ve lots of patience harshini amma...
Anonymous said…
hai..its really nice... i want to know where to buy nip tools?
Thanks..எல்லா கிராப்ட் கடைகளிலும் கிடைக்கும்..நீங்க எந்த நாட்டுலே இருக்கீங்க?
ரொம்ப அழகா இருக்கு ஹர்ஷினி அம்மா.