காலிஃப்ளவர் மஞ்சூரியன் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... ஆனால் அதை எண்ணெயில் பொரித்து செய்யாமல் இருந்தால் எப்படி இருக்கும்!!!! .... அவனில் வேக வைத்து செய்தால் அதே சுவை இருக்கும் ஆனால் கலோரி குறைவாக இருக்கும்... டயட்டில் இருப்பவர்களுக்கும் ஏற்றது
தேவையான பொருட்கள்:-
காலிஃப்ளவர் - 1
மைதாமாவு - 1 tsp
கரம்மசாலா - 1/2 tsp
எண்ணெய் - 2 tsp
அரிசிமாவு - 4 tsp
மிளகாய்த்தூள் - 1/4 tsp
இஞ்சி, பூண்டு விழுது - 1 tsp
உப்பு - தேவையான அளவு
வெங்காயம்- 1
குடமிளகாய்- 1
வெங்காயதாள்- 5
செய்முறை:-
#.முதலில் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சுட வைத்து அதில் காலிஃப்ளவரை போட்டு 5 நிமிடம் வேகவிட்டு தண்ணிர் வடித்து வைக்கவும்.
#.அத்துடன் அரிசிமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் 1 tsp எண்ணெய் விட்டு பிரட்டி அவனில் 350 f -ல் 20 நிமிடம் வேகவிடவும்.
#.பின் 5 நிமிடம் பிராயில் (broil) மோடில் வைத்தால் நன்றாக மேரு மேரு என வெந்து இருக்கும்
#.பின்பு ஒரு கடாயில் 1 tsp எண்ணெய் விட்டு நீளமாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். அது வதங்கியவுடன் குடமிளகாயையும் வதக்கவும் , இதற்க்கு எற்ப உப்பு போடவும்.(சாஸ்ஸிலும் உப்பு இருக்கும் பார்த்து அளவாக போடவும்)
#.அதில் சோய சாஸ் உற்றியபின் அவனில் வைத்த காலிஃப்ளவரை போட்டு பிரட்டி அதன் மேல் வெங்காய தாள் தூவினால் காலிஃப்ளவர் மஞ்சூரியன் தயார்
குறிப்பு:- சோயா சாஸ் ஊற்றும் போது 2 tsp கொச்சப் ஊற்றினால் சுவை நன்றாக இருக்கும்.
.......
Comments
வைத்து செய்தேன்...எனக்கு நன்றாக வரவில்லை..ஏன் என்று தெரியவில்லை..
உங்களுக்கு நன்றாக கிரிஸ்பியா நல்லா வந்து இருக்கு...பார்க்கும்பொழுதே தெரிகின்றது.
சூப்பர்...
காலிஃப்ளவரை முதலிலே வேகவைச்சுடறதாலே சீக்கிரமாவே வெந்துவிடும்.... எதுக்கும் அடிக்கடி பார்த்துக் கொள்ளவும்.
ஆமாம்பா எனக்கும் சில வருடம் முன் ட்ரை பன்னினும் போது நிறைய குப்பைக்கு தான் போகும். :-)