பேன் கேக்



பேன் கேக் இங்கு காலை உணவுகளில் முக்கியமாக இருக்கும்... இது குழந்தைகளுக்கு முகவும் பிடித்த ஒரு காலை உணவு... ஹர்ஷினிக்கும் பான் கேக் ரொம்ப பிடிக்கும்.:-)


தேவையான பொருட்கள்:-

மைதா மாவு – 3 கப்
பேக்கிங் சோடா – 1 tsp
பேக்கிங் பவுடர் – 2 tsp
உப்பு – 1/2 tsp
சக்கரை – 2 tsp
மோர் - 2 கப்
முட்டை- 2
எண்ணெய்- 2 tsp




செய்முறை:-

#.மைதா மாவு,பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர்,உப்பு, சக்கரை எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு டப்பாவில் போட்டு மூடி நன்றாக் கலக்கவும்... இப்பொழுது பேன் கேக் மிக்ஸ் ரெடி.

#.முட்டையை வெள்ளை, மஞ்சள் பகுதியை தனி தனியாக பிரிக்கவும்.

#.மோரில் முட்டையின் வெள்ளை பகுதியை போட்டு கலக்கவும்



#.மஞ்சள் கருவுடன் 2 tsp எண்ணெய் விட்டு கலக்கிக்கொள்ளவும்( வெண்ணெய் வேண்டும்னாலும் சேர்த்துக் கொள்ளலாம்)...பின் இதை மோர் கலவையுடன் சேர்க்கவும்.






#.மாவின் மேல் இந்த மோர் கலவையை ஊற்றி அதை 10 வினாடிகள் கலக்கினால் போதும்...அதிக நேரம் கலக்க கூடாது.



#.இட்லி மாவு பதத்திற்கு இருக்கும்



#.தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்... அதுவே பரவி கொள்ளும்...தேய்க்க வேண்டாம்




#.மேலே ஊத்தாப்பம் போல ஒட்டைகள் விழும் .. பின் திருப்பி போட்டு வெந்தப்பின் எடுக்கவும்





#.இதற்கு தேன், மேப்பில் சிரப் , சுகர் சிரப் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.






....

Comments

Jaleela Kamal said…
ஹர்ஷினி அம்மா நலமா?

இதற்கு முன் போட்ட பதிவுகள் பதிவாகி இருக்கா?

ரொம்ப அருமை பான் கேக், நான் இனிப்பில் தான் செய்வது, வாரம் ஒரு முறை செய்வேன்,

இந்த முறை அடுத்த தடவை செய்து பார்த்து விட வேண்டியது தான்.

உங்கள் பத்துரா ரொம்ப அருமையா வந்தது.
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி ஜலீலா அக்கா.....அப்படியா அக்கா உங்க இனிப்பு ரெசிபியையும் போடுங்க அக்கா.