பூரிக்கு தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு - 1/2 கப்
ரவை- 1/2 கப்
தண்ணீர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
#.கோதுமை மாவில்,ரவை, உப்புக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டுப் பூரிப் பதத்திற்கு மாவு பிசைந்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும்
#.பின்னர், மிகச்சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஸ்சுவீட் சட்னி:-
தேவையான பொருட்கள்:-
பேரீச்சம் பழம் - 10,
புளி - 1 நெல்லிகாய் அளவு,
மிளகாய் தூள் - 1/4 tsp,
வெல்லத்தூள் - 1/2 கப்,
edible gum -சிறிது(தேவைபட்டால்)
உலர் திராட்சை - 10,
உப்பு - 1 தேக்கரண்டி.
செய்முறை:-
#எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் 2 விசில் வேகவிடவும்.
#ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடி கட்டவும்
தேவையான பொருட்கள்:-
புதினா - 1 கப்,
கொத்தமல்லி தழை - 1/2 கை,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - 1/2 tsp,
வெல்லத்தூள் - 1 tbs,
புளி சிறிது,
edible gum -சிறிது(தேவைபட்டால்)
.
உப்பு - தேவையான அளவு.
எலுமிச்சம் பழ சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை:-
edible gum- யை சிறிது நேரம் ஊற வைக்கவும்
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுக்கவும்.
கடைசியாக எலுமிச்சம் சாறை சேர்த்து கலக்கவும்.
...............................
Comments
சட்னிகள் சூப்பர்…
இதில் ரவை – 3/4? நான் பானிபூரியை மைதா மாவில் செய்து உள்ளேன்…நீங்கள் கோதுமை மாவு சேர்ப்பது அதே போல கிரிஸ்பியாக வருமா.. உங்கள் குறிப்புகள் அனைத்து அருமையான குழந்தைகள் விரும்பும்படியாக இருக்கின்றது…
நான் எப்போதும் கோதுமை மாவில் தான் பூரி செய்வேன் நன்றாகதான் வரும்...ரவை சேர்த்தால் தான் கிரிஸ்பியாக இருக்கும்.
கருத்து நன்றி கீதா :-)
என்ன இது,குருமா இல்லாமல் இனிப்பு,புளிப்பு சட்னி இருக்குன்னு கேட்டார்.
நான் இதாங்க பானி பூரின்னு சொன்னேன்.
என்னை ஒரு மாதிரியா பார்த்து சோம்பேரிதனம் பட்டு,பெருசா சுட்டு குடுத்து இது பேரு பானி பூரியான்னு கேட்டார்,நானும் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தேன்.தலையெழுத்துன்னு சொல்லி சாப்பிட்டார்.
இத் பார்க்கும் போது பழசல்லாம் ஞ்பபகம் வந்துடுச்சு!!
இருங்க இருங்க இன்னும் சிவானிக்கா பன்னிடிவீங்க... குழந்தைகளுக்கு குட்டி பூரி, குட்டி தோசை எல்லாம் செய்ய தானா வந்துடும்.
இந்த ஐடியா எனக்கு தோனவே இல்லைப்பா..நன்றி ஹர்ஷினி!!
இனி செய்து அசத்திடுவோம்ல..