தேவையான பொருட்கள்:-
பாஸ்தா-2 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
காரட்,பீன்ஸ், பட்டாணி கலவை- 1/2 கப்(வேகவைத்தது)
டின் தக்காளி சாஸ்/puree - 1/2 கப் (அல்லது பாஸ்தா சாஸ்)
பூண்டு -நான்கு பற்கள்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ்-கால் தேக்கரண்டி
துறுவிய பார்மசான் சீஸ் -1/4 கப்
ஆலீவ் ஆயில் -2 tsp
செய்முறை:-
*.வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டை நசுக்கி வைக்கவும்.
*.தக்காளியை பொடியாக நருக்கவும்.
*.ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் 1/2 ஸ்பூன் உப்பு போட்டு அதில் பாஸ்தாவை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
*.பாஸ்தா வேகும் நேரத்தில் ஒரு காடாயை காயவைத்து எண்ணெயை ஊற்றவும்.
*.அதில் வெங்காயம் பூண்டைப் போட்டு வதக்கவும்.தொடர்ந்து தக்காளி போட்டு வதக்கவும்.
*.அதில் வேக வைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும்.
*.பிறகு தக்காளி சாஸ்/puree (அல்லது பாஸ்தா சாஸ்) ஊற்றவும்.
*.நன்கு கொதித்தும் உப்பு,மற்றும் கால்க்கோப்பை பாஸ்தா வேக வைத்த தண்ணீரைச் சேர்க்கவும்.
*.வெந்துக்கொண்டிருக்கும் பாஸ்தாவை ஜல்லடைக் கரண்டியால் அரித்தெடுத்து உடனே சாஸில் கொட்டி கலக்கவும்.
*.குழந்தைகளுக்கு தனியாக எடுத்த பின் சில்லி ஃபிளேக்ஸ் மேலே தூவிக்கொள்ளலாம்.
*.பாஸ்த்தாவை பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாக பரிமாறவும்.
........
Comments
Hope you would have settled down in new place. Take care.
அடுத்த மாதம் வேற ஊருக்கு நல்லபடியாக செட்டிலாக வாழ்த்துக்கள்.நீண்ட நாள் கழித்து குறிப்பு பார்க்கையில் சந்தோஷம்,நன்றாக இருக்கு.நிச்சயம் பிள்ளைகளுக்கு பிடிக்கும்.
இது பாஸ்தா தான் பல வடிவங்கலில் கிடைக்கிறதே.