குழந்தைகளுக்கு ஏற்ற அடை (புரோட்டின் தோசை) இது... சில குழந்தைகளுக்கு கடுகு வெங்காயம் தாளித்தது பிடிக்காது,ஆனால் தோசை பிடிக்கும் அதே தோசையில் பருப்பு வகைகளையும் சேர்த்த அடை தான் இது.
தேவையான பொருட்கள்:-
அரிசி - 1கப்
உளுந்து -2 tsp
துவரம்பருப்பு -2 tsp
கடலைப்பருப்பு -2tsp
பாசிப்பருப்பு -4 tsp
உப்பு- சுவைக்கேற்ப
மிளகுத்தூள்- சிறிதளவு
தேங்காய்த்துருவல்- 2tsp (விரும்பினால்)
செய்முறை:-
*.அரிசியையும் பருப்பு வகைகைளயும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
*.மாவை கொற கொறப்பாக என்று அறைக்கவும்.
*.அதில் தேங்காய்த்துருவல், உப்பு , மிளகுதூள் சேர்த்து தோசை மாவுப்பதத்தில் கரைக்கவும்.
*.தோசை தாவில் லேசாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
*.இதோ புரோட்டின் தோசை தயார்.
..............
Comments
சூப்பர் தோசை எனக்கு ரொம்ப பிடித்தது, நான் வெரும் வெல்லம் அல்லது வெங்காய துவையல் தொட்டு சாப்பிடுவேன், மிளகு சேர்த்து இருக்கீங்க, அது கேஸை எடுத்துவிடும்.
ஆனால் மெல்லியதா எப்படி மொரு மொரு வென வந்தது, கொஞ்சம் திக்காக இருக்குமே?
அக்கா நான் இந்த தோசையில் வெங்காயம் எல்லாம் தாளிச்சு போடலையே அக்கா... அத்தான் லேசாக வந்தது... அதுவும் இல்லாமே ஹர்ஷினிக்கு மொரு மொரு தோசைதான் பிடிக்கும் :-)