கொத்துக்கறி




கொத்துக்கறி

தேவையான பொருட்கள்:-

கொத்துக் கறி - கால் கிலோ(ஆட்டு இறச்சி)
முட்டைகோஸ்(அல்லது)காலிபிளவர்- 1/2 கப்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி,பூண்டு விழுது - 1 Tsp
மஞ்சள் தூள் - 1 Tsp
மிளகாய் தூள் - 1/2 Tsp

வருத்து அரைக்க:

மிளகு - 3/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
பட்டை - 1 அங்குலம் அளவு
கிராம்பு - 4 என்னம்
வெங்காயம் - 1
தக்காளி -1
தேங்காய் -1/2 கப்

செய்முறை:-

#.குக்கரில் ஆட்டுஇறச்சியுடன் உப்பு மஞ்சள்தூள் போட்டு 2 விசில் வேகவிட்டு எடுக்கவும்.

#.காளிபிளவரை பூக்களாக பிரித்து அதை வெந்நீரில் போட்டு கழுவி வைக்கவும்.



#.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு குறைந்த தணலில் நங்கு வருக்கவும்......இதை நெசாக அரைத்துக்கொள்ளவும்.



#.பிறகு ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

#இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

#.பிறகு வேக வைத்த கொத்துக்கறி,காலிபிளவர் சேர்த்து நன்கு வதக்கவும்.



#சிறிது வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நங்கு சுண்ட வதக்கவும்.

#.தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.




#.இந்த கொத்துகறி சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.






....................

Comments

GEETHA ACHAL said…
மிகவும் அருமையாக இருக்கு. இப்பொழுது டயட்டில் இருப்பதால் டயட் முடிந்தவுடன் செய்து பார்க்கவேண்டும்.இப்படி எல்லோரும் செய்துகாட்டு என் ஆசையை அதிமாக்குகின்றிங்க..நன்றி.
கீதா டயட்டை வாரம் ஒரு நாள் மறந்து டயட்டுக்கு லீவ் கொடுத்துடுங்க. :-) நன்றி கீதா.
Menaga Sathia said…
சூப்பராயிருக்கு ஹர்ஷினி.கொத்துக்கறில காய் போட்டு செய்தது இல்லை.ஊருக்கு போனால்தான் செய்து பார்க்கனும்.
மேனகா காய் போடாமலும் பன்னலாம் .... ஆனால் எனக்கு காய் சேர்த்தால்தான் பிடிக்கும், முட்டைகோஸ் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Jaleela Kamal said…
ஹர்ஷினி பார்க்கவே ந்ல்ல இருக்கு, சப்பாத்தி, ரொட்டிக்கு ஏற்ற டிஷ்,

நானும் எல்லா காயிடனும் கொத்து கறி சேர்த்து செய்வேன்.

இதே காலிபிளெவர் இராலிலும் ரொம்ப நல்ல இருக்கும்.

பிரெசென்டேஷன் ரொம்ப சூப்பர்.
மெயில் ஐடி கேட்டேன் கொடுக்கலையே.
நன்றி ஜலீலா அக்கா

சாரி அக்கா நான் இப்போ வெளியூரில் இருக்கிறேன்....இன்னைக்கு தான் பார்த்தேன்.இன்னைக்கே என்னோட ஜடி அனுப்பறேன் அக்கா :-)