முருக்கு நம் பலகாரத்தில் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... ஆனால் இந்த முருக்கு பன்ன அரிசி ஆட்டி, பொட்டுகடலையை பொடித்து முருக்கு பன்னுவதை பார்த்தாலே ஏதோ இது பெரிய வேலை போல என நினைத்தேன்..ஆனால் என் தோழி லதா செய்யும் முறையில் பன்னினால் முருக்கு உடனே தயார் 1 கப் அரிசி மாவு போட்டால் 10 நிமிடத்தில் முருக்கு அழகாக தட்டில் இருக்கும் :-)
தேவையான பொருட்கள்:-
அரிசிமாவு - 4 கப்
கடலைமாவு - 1 கப்
வெண்ணெய் - 1tsp
எள் - 1 tsp
எண்ணெய்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:-
*.அரிசிமாவு, கடலைமாவு,உப்பு, வெண்ணெய், எள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டுக் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
*.வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு முறுக்கு குழலில் 3 துவாரமுள்ள அச்சைப் போட்டு மாவைக் குழலினுள் வைத்து எண்ணெயில் வட்டங்களாகப் பிழியவும்.
*.இரு பக்கங்களும் நன்றாக வெந்து சத்தம் நின்றதும் கம்பியால் எடுக்கவும்.
*.சுவையான முருக்கு நொடியில் தயார்.
....................
Comments
ஆஆ...முருக்கு ஆசையை எற்படுத்துவிட்டிங்க...எல்லா பொருட்களும் வீட்டில் இருக்கின்றது...அக்ஷ்தா குட்டிக்கு செய்து கொடுக்கவேண்டியது தான்..
அக்ஷ்தா குட்டிக்கு பன்னிகுடுங்க...குட்டிக்கு கண்டிப்ப பிடிக்கும்.
http://susricreations.blogpsot.com
கண்டிப்பா வாசம் அடிக்காது..அதுவும் இல்லாமே எண்ணெயில் நல்லா வெந்துடும்..நல்லா இருக்கும். :-)