கருப்பு கம்மல்

போன வாரம் என் தோழிகளுக்கு jewelry Making சொல்லி கொடுத்தேன்...எல்லாருக்கும் ரொம்ப பிடித்து விட்டது இப்போ ஒரு வாரத்தில் 30 க்கும் மேல் தோடு வகைகளை செய்து வைத்து உள்ளார்கள்... அதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது...செய்வதும் ரொம்ப எளிது தான் இதோ அன்று செய்த ஒரு மாடல் தோடு .
தேவையானப் பொருட்கள் :-
#.மணிகள் (பெரிய, சிறிய அளவுகளில்)
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.அலங்கார மாடல்(ரெடிமேடாக கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கும்)
செய்முறை:-
#. ஒரு நீளமான ஊசியில் ஒரு பெரிய கருப்புமணி கோர்க்கவும்.
#.சில மணிகள் பெரிதாக இருந்தால் கம்பியில் இருந்து வெளியே வந்துவிடும் அப்படியானால் ஒரு சிறிய கோல்டன் மணியே இணைத்தால் சரியாகிவிடும்..பார்க்கவும் நன்றாக இருக்கும்.

#.பிறகு ஊசியை தேவையான அளவு வளைத்து கொண்டு மீதியை வெட்டி விடவும் மணிகளுக்கு நெருக்கமாக வளைத்து விடவும்.

#.அதன் பின் ஒவ்வொரு அடுக்கிக்கும் ஒவ்வொரு மணிகளாக அதிகரிக்கவும்.

#.அதன் பின் பட்டையில் மாடலில் மாட்டிவிடவும்

#.பின் காதில் மாட்டும் கொக்கியில் மாட்டிவிடவும்.

#.அழகான தோடு தயார்.
.....................

Comments
எவ்வளவு பொருமையாக செய்து இருக்கின்றிங்க..
எனக்கு இது மாதிரி கம்மல் மிகவும் பிடிக்கும்...
நீங்கள் எனது ப்ளாக்கில் கருத்து தெரிவித்திருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி..அடிக்கடி ப்ளாக் பக்கம் வந்து எனோட ரெசிபியும் ட்ரை பண்ணி பாருங்கோ:)
(அன்பு கட்டளைதான்..தவறாக நினைக்க வேணாம்..)
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
இன்னைக்குத்தான் பார்த்தேன்
எனக்கு இதில் ஆர்வம் அதிகம்
எதையாவது செய்யனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், கடவுளா பார்த்து நீங்க விருது கொடுத்து இந்தப் பக்கம் கைய காண்பிச்சு இருக்கா மாதிரி இருக்குங்க.