வரலட்சுமி பூஜை





வரலட்சுமி பூஜை இந்த பண்டிகை பெண்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைளில் ஒன்றாகும். ஒவ்வோரு வருடமும் நானும் எப்படி பன்னனும்னு அம்மாகிட்டே கேட்டுட்டே இருப்பேன் அதனால் தான் இந்த பதிவு...விஷணுவின் மனைவியான லட்சுமி அஷ்ட லட்சுமிகளும் (அஷ்டம் என்றால் எட்டு. அஷ்ட லட்சுமிகள் தனலட்சமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, தைரியலட்சுமி, ஜயலட்சுமி, வீர்யலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யா லட்சுமி ஆகிய லட்சுமிகள் அஷ்ட லட்சுமிகள் என அழைக்கப்படுவர்) அஷ்டஐஸ்வர்யங்களையும் அளிக்க வேண்டும் என பிரார்தித்து செய்யப்படுகிற பூஜை இது

ஆடி-ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி பூஜை செய்யப் படுகிறது

பூஜைக்கு தேவையான பொருட்கள்:

லட்சுமிமுகம் (இல்லையென்றால்) படம்

1. குங்குமம்
2. சந்தனம்
3. பூக்கள் (சாமந்தி, இருவாட்சி, மல்லிகை, முல்லை, அல்லி, தாமரை, அரளி, சம்பகம், தாழம்பூ)
4. வாழைப்பழம்
5. ஆரஞ்சு
6. மாதுளை
7. விளாம்பழம்
8. மாம்பழம்
9. வாழை
10. திராட்சை
11. கற்கண்டு
12. தேங்காய்
13. தாம்பூலம்
14. மஞ்சள்
15. தேங்காய்
16. மாவிலை

வீட்டின் தென்கிழக்கு பகுதியில் ஒரு சிறு மண்டபம் (மேடை)அமைத்து அதில் லட்சுமி முகத்தை அழங்கரித்து ஒரு பலகையில் வைக்க வேண்டும்.ஒரு தலைவாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் பக்கத்தில் தேங்காய்,மாவிலை,எலுமிச்சைபழம்,பழங்கள் , நாணயங்கள் எல்லாம் வைக்கவும் . ஸ்சுவாமிக்கு மஞ்சள் ஆடை உடுத்தவும்.

ஒரு மஞ்சள் கயிற்றில் பூ முடிந்து 9 முடிச்சுகள் போட்டு அதை கையில் கட்டிகொள்ளவும்... சுமங்கலி பெண்களை அழைத்து பூஜையை ஆரப்பிக்கவும்..



ஒரு கும்பத்தில் நீர் நிரைத்து அதில் சந்தனம் குங்குமம் வைத்து 9 மாவிலை வைத்து அதன் மேல் தேங்காய் வைக்க வேண்டும்.5 வகை ஆராத்தி எடுக்கவேண்டும். மஞ்சள் பிடித்து கணபதி செய்து முதலில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்...ஸ்தோத்திரம் படித்து பூஜிக்கவும்.....அம்மன் அருளாள் நினைத்தது நடக்கும்



இனிப்பு செய்து படைக்கவும். சுமங்கலி பெண்களுக்கு பூ , பழம் , தேங்காய், வெற்றிலை, வளையல், மஞ்சள் , குங்குமம் குடுக்கவும்...


.............

Comments