பாலக் பனீர்
தேவையான பொருட்கள்:-
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கீரை - ஒரு கட்டு
சீரகம் - 2 தேக்கரண்டி
பனீர்(டோஃபு) - 1 கப்
பூண்டு - 5 பல்
பச்சைமிளகாய் - 3
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் -அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் -அரை தேக்கரண்டி
எண்ணெய் -
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:-
$.கீரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
$.ஒரு வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கவும்.
$.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு,நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
$.வெந்த கீரை, வதக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கவும்
$.மீதி எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து கொஞ்சம் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
$.2 நிமிடம் வதக்கியபின் பனீர்(டோஃபு), 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
$.கிரேவி திக்காக வந்ததும் இறக்கவும்.
$.சப்பாத்தி, ரோட்டி,நாண்க்கு ஏற்றறது.
குறிப்பு:-
விருப்பம் இருந்தால் பாசி பருப்பு சேர்த்தும் கீரையை வேக வைக்கலாம்.
கீரையை ரொம்ப நேரம் வேகவைத்தால் கலர் மாறிவிடும்.
*.நான் சமையலில் பன்னீர் உபயோகிப்பது இல்லை அதற்க்கு பதிலாக டோஃபு தான் இருக்கும்.
.............................................................
Comments
நல்லாயிருக்குப்பா,சத்தான எளிமையான உணவு.
கீரையுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் நிறம் மாறாமலிருக்கும் ஹர்ஷினி அம்மா.
நானும் பல நாளாக பாலக் டோஃபு செய்ய வேண்டும் என்று நினைப்பேன்...ஆனால் செய்த்து இல்லை..இப்பொழுது பார்த்துவிட்டேன்...செய்து விடுகிறேன்.
இதற்கு Firm Tofu தானே உபயோகித்து இருக்கின்றிங்க..