தேவையான பொருட்கள்:-
வெங்காயம்- 2
தக்காளி- 2
உருளைகிழங்கு-1 (வேகவைத்து மசித்தது)
பட்டாணி - 1/2 கப்(புரோசன்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்தூள் - 1/2 tsp
கரம்மசாலா தூள்- 1/2 tsp
உப்பு
பிரட் துண்டுகள்
எண்ணெய்
செய்முறை:-
@. ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
@. வெங்காயம் பாதி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
@. அதனுடன் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள்,கரம்மசாலா தூள் போட்டு வதக்கவும்.
@. பின் வேகவைத்து மசித்த உருளை கிழங்கை போட்டு பிரட்டவும்.
@. அத்துடன் புரோசன் பட்டாணியை சேர்த்து எல்லாம் ஒன்ரு சேர பிரட்டி அடுப்பை அணைத்துவிடவும்.
@. பிரட் உள்ளே வைக்கும் மசாலா தயார்.
@. 4 பிரட் துண்டுகளுக்கு எண்ணெய் அல்லது வெண்ணெய் பூசி வைக்கவும்.
@. இரண்டு பிரட்டின் மேல் மசாலாவை வைக்கவும்.
@. மீதி இரண்டி துண்டுகளை அதன் மேல் வைத்து சான்விச் மேக்கரில் வைக்கவும்.
@. கொஞ்சம் பென்னிறத்துக்கு நிறத்திற்கு மாறியதும் உடனேயே ப்ரெட்டை வெளியில் எடுத்து விடவும். அழகாக வெட்டப்பட்டிருக்கும் அல்லது அந்த அடையாளத்தின் மேலே மெதுவாக கத்தியால் வெட்டிவிடவும்
@. சுவையான ப்ரெட் சாவிச் தயார்.
குறிப்பு:-
@.மசாலாவை முன்னே தயாரித்துவிட்டால் சாண்விச் இரண்டே நிமிடத்தில் தயார் செய்து விடலாம்.
@.ப்ரெட்டின் மேல் எண்ணெய் விட வெண்ணெய் பூசினால் நல்ல மெரு மெரு வென்ரு இருக்கும்
.........
Comments
very nice...
32 கேள்விகள் - தொடர்ப்பதிவு
http://sashiga.blogspot.com/2009/07/blog-post_19.html