முட்டை பப்ஸ்
தேவையான பொருட்கள்:
பேஸ்ட்ரி ஷீட் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
வெங்காயம்-1
தக்காளி-2
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
முட்டை- 6
உப்பு
எஃக்வாஸ்(ஒரு முட்டையை உடைத்து கப்பில் உற்றி 1ஸ்பூன் தண்ணீர் கலந்து வைக்கவும்)
செய்முறை:-
@.பேஸ்ட்ரி ஷீட்-ஐ 45 நிமிடங்கள் முன்பு ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்
@.முட்டையை வேக வைத்து உரித்து இரண்டாக வெட்டி வைக்கவும்.
@.கடாயில் எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
@.வெங்காயம் சற்றே வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
@.பின்னர் பொடியாக வெட்டிய தக்காளி போட்டு மசாலாபொடி,உப்பு சேர்த்து வதக்கவும்.
@பேஸ்ட்ரி ஷீட்டை, உலர்ந்த மாவு தூவி சப்பாத்திக் கட்டையால் லேசாகத் தேய்த்து விரும்பும் வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.
@.ஒவ்வொரு சதுரத்திலும் கொஞ்சம் மசாலாவை வைக்கவும்
@.மசாலா மேல் பாதி முட்டையை வைக்கவும்.
@.மாவின் ஓர பகுதிகளுக்கு எஃக்வாஸ் செய்து ஒரு முள் கரண்டியால் லேசாக அழுத்தவும்.
@. பேக்கிங் தட்டில் அடுக்கி பப்ஸ் மேல் எஃக்வாஸ் குடுக்கவும்.
@. 375 டிகிரி ஃபாரன்ஹீட் ப்ரீஹீட் செய்த அவன் -ல் வைத்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
@.20 நிமிடங்களில் சுவையான பப்ஸ் தயார்.
குறிப்பு:-
இதே போல காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம், சிக்கன் பப்ஸ் என நம் இஸ்டத்து விதவிதமா செய்யலாம்...செய்வதும் ரொம்ப எளிது.
.........................................
Comments
மேனகா மெயில் பாத்தீங்களா? :-)
இன்னும் நீங்கள் அழைத்ததற்கு பதில் போடல,,டைம் கிடைக்கும் போது போடுகிறேன்.
ஜலீலா
எனக்கு தெரிந்து எல்லா பிளாக்கை விட உங்கள் பிளாக் தான் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு