ஈசி தேங்காய் பர்பி
இது வழக்கமாக செய்யும் தேங்காய் பர்ப்பி விட கொஞ்சம் வித்தியசமாக இருக்கும்....என் தோழியிடம் இருந்து கற்றுக்கொண்டது...எப்பவும் தேங்காய் பர்பி செய்ய பாகு பதம் வேண்டும் சரியாக வரவில்லை என்றால் இருகிவிடும்...ஆனால் இந்த பர்பி செய்வது மிக எளிது, சுவையும் வித்தியசமாக இருக்கும் ...Condensed Milk இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:-
தேங்காய் தூள் -4 கப்
Sweetened Condensed Milk - 1 கேன்(14oz)
ஏலக்காய்தூள்- 1/2 ஸ்பூன்
நெய் -1/2 ஸ்பூன்
செய்முறை:-
*கடாயில் தேங்காய்தூள் போட்டு குறைந்த தனலில் நிறம் மாறாமல் வருத்துக்கொள்ளவும்.
*பின் அதில் Condensed Milk, ஏலக்காய்தூள் சேர்த்து கட்டி தட்டாமல் கிளரவும்.
3 நிமிடம் கிளரினால் போதும்.
* ஒரு நேய் பூசிய தட்டில் தேங்காய் கலவையை கொட்டி சமமாக பரப்பிவிடவும்.
* ஃப்ரிஜில் ஒரு மணி நேரம் குளிர வைக்கவும்.
*. 1 மணி நேரம் களித்து வேண்டிய வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.சுவையான பர்பி தயார்.
குறிப்பு:-
ஒருமணி நேரம் குளிர வத்து கட் பன்னினால் தான் பதம் சரியாக இருக்கும்...சாப்பிட 10 நிமிடம் முன் எடுத்து வெளியே வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...(அப்பிடியே சாப்பிடலாம்)..இந்த பர்பி கொஞ்சம் சாஃப்ட் தான் இருக்கும்.
*****************************************************************
Comments