கிருஸ்டல் லாங் தோடு




கிருஸ்டல் லாங் தோடு

இப்போது லாங் தோடு தான் எல்லாரும் விரும்பி அணிகிறார்கள்...அதுவும் கிருஸ்டல் மணி இருந்தால் அதன் விலை கண்டிப்பாக அதிகமாக தான் இருக்கும்,அதுவும் நாம் விரும்பும் வண்ணத்தில் கிடைக்காது ...அதை நாமே செய்தால் குறைந்த விலையில் பல வண்ணங்களில், பல வடிவங்களில் கிடைக்கும் வாங்க கிருஸ்டல் தோடு செய்வதை பார்க்கலாம்...

தேவையானப் பொருட்கள் :-

#.கிருஸ்டல் மணிகள் (பெரிய, சிறிய அளவுகளில்)
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.அலங்கார மாடல்(ரெடிமேடாக கடைகளில் பல வடிவங்களில் கிடைக்கும்)






செய்முறை:-

#. ஒரு நீளமான ஊசியில் விருப்பம் போல மணிகளை கோர்க்கவும்.




#.கம்பி மடிக்கும் அளவுக்கு விட்டு மீதியை வெட்டி விடவும்.



#.கம்பியை குரடு வைத்து வளையம் போல மடக்கிக்கொள்ளவும்.



#.இரண்டு கலர் மணிகளையும் ஒவ்வொன்றாக கோர்க்கவும்.



#.பெரிய மணி கோர்க்கும் போது வெளியே வரமால் இருக்க லேசாக கம்பியை வளைத்த பின் மிதியை வெட்டவும்.



#.அதை குரடால் வளைத்து விடவும்...வளைக்க படத்தில் இருக்கும் குரடு போல தான் இருக்க வேண்டும் அதுவே வளையம் போல வரும்.



#.பின் தோடில் இனைக்கவும்.



#.விருப்பம் போல மணிகளை குறைத்தும், அதிகரித்தும் மாட்டவும்.



#.காதில் மாட்டிம் கொக்கியில் இனைத்தபின் அதிலும் ஒரு மணியை கோர்த்தால் அழகாக இருக்கும்.



#.லாங் கிருஸ்டல் தோடு தயார்.




***********************************************************************

Comments

Unknown said…
ஹர்ஷினி உங்கள் கைவண்ணம் மிகவும் அழாகாக இருக்கு. ரொம்ப நல்ல செய்திருக்கிங்க.
கம்மல் டிசைன் ரொம்ப நல்ல செலக்ட்செய்திருக்கிங்க. இங்கு இப்படி ரெடிமேடாக கிடைக்குமா?
நன்றி Faiza ..:-)

சென்னையில் இன்னும் நிறைய மாடல் கிடைக்கும்பா ட்ரை பன்னி பாருங்க.
கல்லிலே கலைவண்ணம் இது தானா? அசத்துங்க.. ஆமா உங்க ஐடி என்னங்க?
உங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்

அதை தாங்க தேடிட்டு இருக்கேன் :-)
GEETHA ACHAL said…
மிகவும் அழகாக இருக்கின்றது....
நன்றி கீதா :-)
Menaga Sathia said…
எப்படி ஹர்ஷினி இதெல்லாம் உங்களால் இவ்வளவு அழகா செய்யமுடிகிறது.சூப்பரா இருக்கு தோடு.அடுத்த முறை செய்யும் போது எனக்கும் சேர்த்து செய்து பார்சல் அனுப்பி வைங்க.ஆமா இப்பவே சொல்லிட்டேன்..
மேனகா உங்களுக்கு இல்லாததா என்னனென வேனும்னு செல்லுங்க அனுப்பிடரேன்...ஆனா எனக்கும் வடை, தட்டை எல்லாம் அனுப்பனும் சரியா :-)
Jaleela Kamal said…
ஹர்ஷினி இந்த தோடு கலர் காம்பினேஷன் சூப்பர்.

உங்கள் எல்லா தோடையும் பார்த்து வைத்து கொள்கிறேன்.

ஆனால் செய்ய டைம் தான் கிடைக்கல, பிற்காலத்தில் ஊரில் போய் செட்டில் ஆகும் போது இத பார்த்து செய்து ஒரு கடை போட்டு கொண்டு உட்கார்ந்து விட வேண்டியது தான் ஹி ஹி
ஜலீலா அக்கா கடை போடும்போது மறக்கமே எனக்கு 50% ஓகேவா அக்கா?.
GEETHA ACHAL said…
இந்த லிங்கினை பார்க்கவும்.http://geethaachalrecipe.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html