சினமன் ரோல்
இங்கு காலை உணவில் அதிகம் இடம் பிடிக்கும் இன்னொரு உணவு இந்த சினமன் ரோல் இது இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் நான் குழந்தைகளுக்காக பன்னியதால் அளவு சிறியதாக இருக்கிறது.ரொம்ப எளிமையாகவும் விரைவாகவும் எல்லாருக்கும் பிடித்தது இந்த சினமன் ரோல்.
தேவையான பொருட்கள்:-
சினமன் தூள் - 1/4 டீஸ்பூன்
திராட்சை
முந்திரி
வெண்ணெய் (unsalted butter) - 1 ஸ்டிக்
கருப்பு சக்கரை(brown sugar)-1/3 cup
பேஸ்ட்ரி ஷீட் - 1
செய்முறை:-
*.அவனை 400 F க்கு முற் சூடு படுத்தவும்
*. உருகிய 4 tsp வெண்ணெய்யுடன் brown sugar கலந்து வைக்கவும்
*.பேஸ்ட்ரி ஷீட் அறை வெப்ப நிலையில் இருக்க வேண்டும்.
*.ஒரு கட்டிங் போர்டில் கொஞ்சம் மாவு தூவி பேஸ்ட்ரி ஷீட்யை சமமாக பரப்பவும்
*.அதன் மேல் ஒரு கோட் உருகிய வெண்ணெயை பூசவும்.
*.அதக்கும் மேல் brown sugar- யை பரவலாக தூவவும்.
*.பின் சினமன் தூளை கொஞ்சம் தூவவும்(சினமன் பிடித்தவர்கள் அதிகமாக அதற்க்கு ஏற்ப தூவிக்கொள்ளவும்)
*.அதற்க்கும் மேல் உலர் திராட்சை போடவும்.
*.ஒரு ஓரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரோல் செய்யவும்.
*.ரோலை 1 ,1/2 இன்ச் அளவுக்கு வெட்டிக்க் கொள்ளவும்.
*.ஒரு கப் கேக் ட்ரெயில் கொஞ்சம் முந்திரி போட்வும்.(வால்நட் ,பாதம்மும் போடலாம்)
*. அதன் மேல் முதலில் கலந்து வைத்த வெண்ணெய்,brown sugar கலவையை கொஞ்சம் முந்திக்கு மேல் கொஞ்சம் வைக்கவும்.
*.அந்த கலவைக்கு மேல் வெட்டிய ரோலை வைத்து 20 நிமிடம் பேக் செய்யவும்
*.5 நிமிடம் ஆறிய பின் தலைகிழாக திருப்பினால் அழகிய சுவையான சினமன் ரோல் தயார்.
*.நீங்களும் சுவைத்து பாருங்கள்.
****************************************************
Comments
அழகாக செய்து இருக்கின்றிங்க...
ஏங்க யாருங்க அந்த அப்பாவி??? அவனை(ரை?) சூடு பண்ணினா கொலை குத்தம் ஆயிடாது?
( ஹீம்ம் இத எல்லாம் செஞ்சு சாப்பிட முடியாதத எப்படி எல்லாம் மேட்ச் பண்ண வேண்டி இருக்கு !!)
கவுண்டர் : ஓ !! முதல்ல கொல கேசுல மாட்டி விட பாத்தாங்க.. இப்போ பிரவுன் சுகர்னு பெரிய கேஸ் தான்.. டேய் அடுப்பு வாயா ஜாக்கிரதயா இரு.. இவங்க சொன்னாங்கன்னு பிரவுன் சுகர் எல்லாம் வாங்க போயி களி திங்கற மாதிறி ஆயிட போகுது..
இதை டைப் பன்னும் போதே கவுண்டரை நினைத்து கொஞ்சம் உசாரா வார்த்தைகளை போடனும்னு நினைத்தேன்.....ஆனாலும் இப்படி ஒரு கொலை வெறி இருக்க கூடாது கவுண்டருக்கு. :-)
இப்ப செய்து பார்க்க தான் நேரம் இல்லை.
அக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
உங்களுக்குகாகதான் இந்த ஸ்சுட்டே எடுத்துக்குங்க அக்கா
நீங்களும் அப்பப உங்க கருத்தை சொல்லுங்க... இங்கையும் அனுமதி இலவசம் தான்...தங்கள் வருகைக்கு நன்றி.:-)