Banana-Walnut Muffins
வாளைபழம் கருப்பாக நிறம் மாறிவிட்டால் சாப்பிட பிடிக்காது, ஆனால் நங்கு இனிப்பாக இருக்கும் அதை தூக்கி எறியாமல் அதை வைத்தே ஒரு மஃப்பின்...இது இங்கு கடைகளில் அதிகமாக வாங்கும் ஒரு திண்பண்டம்...வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்
தேவையான பொருட்கள்:-
மாவு- 1, 1/3 கப்
சக்கரை-3/4 கப்
பட்டை பொடி -1 tsp ( cinnamon )
baking powder -2 tsp
உப்பு - 1/4 tsp
1/2 கப் வால்நட்( chopped walnuts)
வாளைபழம் -2
பால் -1 கப்
முட்டை -1
வென்னிலா எசன்ஸ்-1 tsp
4 tsp வெண்ணெய் (unsalted butter)
செய்முறை:-
#.ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு,பட்டை பொடி(cinnamon ),baking powder எல்லாம் போட்டு கலந்து தனியாக வைக்கவும்.
#வேரு ஒரு பாத்திரத்தில் முட்டை,பால்,சக்கரை,வெண்ணெய்,வென்னிலா எசன்ஸ் எல்லாம் போட்டு கலக்கவும்.
#.அதில் மசித்த வாளைபழத்தை போட்டு கலக்கவும்.
#.இந்த கலவையை எடுத்து மாவில் ஊற்றி கட்டி இல்லாமல் கலக்கவும்.
#வால்நட்ஸ்வுடன் ஒரு ஸ்பூன் மாவு போட்டு கலந்து அதை கேக் கலவையில் போட்டு கலக்கவும்
#.கப் கேக் மோல்டில் முக்கால் பாகம் விடவும்.
#.375°சூடான அவனில் (oven) 20 நிமிடம் வேகவிடவும்
#.ஒரு டூத் பிக்கால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் இருந்தால் வெளியே எடுத்து விடவும்...ஒவென் பொருத்து டைம் வேருபடும்.
.
Comments
cheers,
ammu.