பேல் பூரி- Bhel poori
எல்லார் வீட்டுலையும் இப்ப பொரி இருக்கும்..... அதை பேல்பூரியா மாத்திடுங்க... அப்புறம் பாருங்க நெடியில் எல்லாமே காலியாகி விடும்....நீங்களும் வாங்க பேல் பூரி சாப்பிட
தேவையானவை:-
பொரி - 2 கப்
மிக்சர் - 1/2 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
வெள்ளரி -1
காரட் (பிடித்தால்)
சாட் மசாலா
இனிப்பு சட்னி
கார சட்னி (முதலிலே குறிப்பு இருக்கு... இது இல்லாமலும் பன்னலாம்.)
செய்முறை:-
#.முதலில் பொரி,மிக்சர்,சாட் மசாலாவை கலந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
#.காய்களை எல்லாம் பொடிபொடியாக கட் பன்னவும்.
#.காய்களுடம் , விருப்பமான அளவு சட்னி சேர்த்து கலந்தபின். பொரியை போட்டு கலக்கவும்.
#.கலந்தவுடன் பரிமாறவும்..சுவையான பேல்பூரி தயார்.
குறிப்பு:-
தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் பொரியுடன் காய் கலவை கலக்கவும்.
...............................................
Comments
Sangamithra