இளநீர் கடல்பாசி



திருமதி.ஜலீலா அவர்களின் குறிப்பை பார்த்து நான் செய்த கடல்பாசி....அப்பாடா ரொம்ப நாளா இதை தேடி தேடி இன்னைக்கு செய்து பாத்தாச்சு... ஹர்ஷினிக்கும் பாக்க ஜெல்லி மாதிரி இருப்பதால் கடல்பாசியை ஜெல்லின்னு நினைச்சு சாப்புட்டுட்டா.. நன்றி ஜலீலா அக்கா.


தேவையானப் பொருட்கள்:-

கடல்பாசி - 10 கிராம்
தண்ணீர் - இரண்டு டம்ளர்
இளநீரில் கிடைக்கும் தண்ணீர் - அரை (அ) முக்கால் டம்ளர்
சர்க்கரை - தேவையான அளவு
பிஸ்தா- தேவையான அளவு
பாதா‌ம் - தேவையான அளவு




செய்முறை:-

#.ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.




#. கடல்பாசி நன்கு கரைந்ததும் அந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.




#மீண்டும் இளநீர் சேர்த்து வேக விடவும்.




#.ஒரு ட்ரேயில் நட்ஸ் எல்லாம் போட்டு அதில் கடல் பாசியை ஊற்றி பிரிஞ்ஞில் வைக்கவும்.



#அழகிய , அரோகியமாக கடல் பாசி தயார்.










#நன்றி ஜலீலா அக்கா





.................................................

Comments

Nithya said…
Paaka super ah iruku. Nan kooda idha try pannen. Parupugal podama andha yelani thengavaiye chinna chinna thundugal aaki poten. Adhu kooda nalla irundhuchu. :)

here is my post:
http://4thsensesamayal.blogspot.com/2009/05/frozen-elani-tender-coconut-water.html

Kandippa aduthavaati unga style la try pannaren.
உங்களுதும் பாக்க நல்லா இருக்கு நித்யா....நன்றி ;-)
செய்முறை அருமை.

படங்களும் அழகு.

//பார்த்து நான் பன்னிய கடல்பாசி....அப்பாடா ரொம்ப நாளா இதை தேடி தேடி இன்னைக்கு பன்னி பாத்தாச்சு... //

'பன்னிய','பன்னி' இடங்களில் 'ண்' போட்டு 'பண்ணிய' 'பண்ணி' ஆக மாற்றி விடுங்கள் அல்லது 'செய்த'
'செய்து' என்று மாற்றி விடுங்கள்.
Jaleela Kamal said…
அப்பா ஹர்ஷினி, எனக்கு டிசைன் செய்து போட்டோ எடுக்க எல்லாம் நேரம் இல்லை.என்னை விட‌ சூப்ப‌ரா செய்து இருக்கீஙங்க‌.

சூப்பரா குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் கலக்கிட்டீங்க,

ஐஸ் ட்ரே அதே போல் டிசைனாவே விற்கிறதா?

இது நான் செய்ய ஆரம்பித்ததிலிருந்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதான், நேற்றும் இளநீர் கடற் பாசி தான், இன்றும் அதான் செய்து வைத்துள்ளேன்.
Nannum idu pool seiven ..but no nuts.. Looks so good and i have to try this with nuts..paarka rhomba algaga irukku.
Menaga Sathia said…
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பராயிருக்குப்பா.அதுவும் பல டிசைனில் பார்க்க சாப்பிட ஆசையா இருக்கு ஹர்ஷினி அம்மா.நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி? நமக்கும் பார்சல் அனுப்பி வைங்க சாப்பிட.
Unknown said…
ரொம்ப நல்லாயருக்கு ஹர்ஷினி. நான் இதனை போல் செய்ததில்லை. அடுத்த முறை ட்ரை பண்ணுகிறேன்.
துபாய் ராஜா உங்கள் கருத்துக்கு நன்றீங்க... மாத்தியாச்சு :-)
ஜலீலா அக்கா ஐஸ் ட்ரே சிலிக்கனில் பல வடிவத்தில் இப்ப கிடைக்குது... இதுலே இருந்து எடுப்பதும் ரொம்ப எளிது.
நன்றி பவித்ரா... நட்ஸ் இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
மேனகா நேத்தே பார்சல் அனுப்பிட்டேன்பா இன்னும் கிடைக்கலையா!!!
நன்றி Faiza..... நானும் அடுத்த முறை பழங்கள் போட்டு ட்ரை பண்ணுகிறேன்.
GEETHA ACHAL said…
சூப்பராக இருக்கு ஹர்ஷினி அம்மா...இது வரை இப்படி செய்தது இல்லை..கண்டிப்பாக செய்துவிட்டு சொல்கிறேன்..