எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு
தேவையானப் பொருட்கள்:
கத்திரிக்காய்
புளி - 1/2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
புண்டு- 2
அரைக்க:-
தேங்காய் -1/4 கப்
வெங்காயம் -1/2
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 ஸ்பூன்
செய்முறை:
#. புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, புளித்தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
#.ஒரு வாணலியில் 1 அல்லது 2டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம்,வெங்காயம், தேங்காய், மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்து, ஆறியவுடன், சிறிது மஞ்சள்தூள்,உப்புச் சேர்த்து வதக்கவும்.
#.வருத்த கலவையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
#.கத்திரிக்காயின் காம்பை இலேசாக நறுக்கி விட்டு (காம்பை முழுதாக நீக்க வேண்டாம்), அதன் அடி பாகத்தை நான்காகக் கீறிக் கொள்ளவும். அதில் அரைத்த கலவையை நன்றாகத் திணித்துக் கொள்ளவும். மீதியை தனியாக வைத்துக் கொள்ளவும்.
#.ஒரு கடாயில் எண்ணையை விட்டு, எண்ணை சூடானதும், அதில் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலையும்,பூண்டும் போட்டு வதக்கவும்.
#பின்பு அதில் ஸ்டப் செய்த கத்திரிக்காயையும் சேர்க்கவும். கத்திரிக்காயை ஒன்று ஒன்றாக எடுத்து, தனித்தனியாக இருக்கும்படி போடவும்.
#.ஒரு மூடியால் மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும். ஒரிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, மூடியைத் திறந்து காயைத் திருப்பி விடவும்.
#.கத்திரிகாயின் தோல் நிறம் மாறியதும், அதில் புளிக்கரைசல்,சாம்பார் பொடி அரைத்து வைத்த கலவையையும் சேர்த்து,லேசாக காயை திருப்பி விட்டு மீண்டும் மூடி வைத்து கொதிக்க விடவும்.
#.ஒரு கொதி வந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.
................................................
Comments
கலக்கல் குழம்பு...அம்மா ஊரில் இருந்து வந்து இருக்காங்க...கண்டிப்பாக இந்த வாரம் கடைக்கு போகும் பொழுது வாங்கி வந்து செய்து கொடுக்க வேண்டும்.
நன்றி.
do visit my blog when you find time!
என்னடா கீதாவை கானுமேனு பார்த்தேன்...அம்மா வந்துருக்காங்களா...அப்ப இன்னும் கொஞ்சம் நாள் நீங்க பிஸிதான்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி SriLekha :-)
நன்றி மேனகா :-)
வாங்க En Samaiyal நன்றி :-)
Thanks
Sangamithra
Very useful and simple recipies you are posting.... very useful for newly cooking persons like me... I am newly married... my husband is saying that i have improved...
All the credit to your site....
Vidhya...