ஆலு பரோட்டா
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்
உருளை கிழங்கு – 2
மிளகாய்தூள் - 1/4 Tsp
கரம் மசாலாதூள் -ஒரு சிட்டிகை
சீரகத்தூள் - 1/4 Tsp
கொத்தமல்லி- சிறிது
உப்பு
செய்முறை:-
#.கோதுமை மாவை பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
#.உருளை கிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
#அதில் உப்பு, மிளகாய்தூள்,கரம் மசாலாதூள், சீரகத்தூள்,கொத்தமல்லி போடவும்.
#.மசாலா எல்லாம் ஒன்றாக பிசையவும்.
#.பிசைந்த மசாலா கலவையை சிரு சிரு உருண்டைகளாக பிடிக்கவும்.
#.சாப்பாத்தி மாவை சிறிய வட்டமாக தேய்த்து அதில் உருளை மசாலாவை(பில்லிங்கை) வைத்து மாவை சுற்றிலும் மூடவும்.
#.அல்லது மாவை உள்ளங்கையில் வைத்து சிறிய கிண்ணம் போல செய்து அதில் பில்லிங்கை வைக்கலாம்.
#.மசாலா வைத்து மூடிய பகுதியை கீழ் பக்கமாக வைத்து கொஞ்சம் மாவை மேலே தூவி சப்பாத்திகளாக தேய்க்கவும்.
#.சப்பாத்தி கல்லில் போட்டு 1/4 tsp எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
#.திருப்பி போட்டும் கொஞ்சம் வேகவிடவும்.
#சுட சுட ஆலு பரோட்டா தயார்.இதனுடன் தயிர் பச்சடி, சென்னா மசாலா, சட்னி எல்லாமமே நல்லா இருக்கும்.
................................................
,
Comments
உங்க பார்சலை எதிர்பார்த்து ஏமாந்துப் போயிட்டேன்.இதையும் அனுப்பி வைங்க.எதிர்பார்க்கிறேன்...
மேனகா உருளைகிழங்கை மைக்ரோவேவ்லே வேகவைச்சா ரொம்ப தண்ணி விடாது... அப்ப சரியா வரும்.
என்றா ஆளுக்காக பன்னனதுங்க...அதானுங்க இது ஆலு பரோட்டாவா ஆயிட்டதுங்க.
என் பையனுக்காக ஆலு பரோட்டா அடிக்கடி செய்வேன்