கா‌ய்க‌றி ரவாகிச்சடி

கா‌ய்க‌றி ரவா கிச்சடி



ரவா உ‌ப்புமா செ‌ய்து கொடு‌த்தா‌ல் யாருக்கும் சாப்பிட ‌பிடி‌க்க‌வி‌ல்லையா? வெ‌ஜ் ரவா ‌கி‌ச்சடி செ‌ய்து கொடு‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.காய்கள் இருப்பதால் உடலுக்கும் நல்லது... என்னவர் இதுவரை திருமணமாகி 9வருடத்தில் கிச்சடி, உப்புமா எல்லாம் சாப்பிட்டதே இல்லை...இதை பார்த்ததும் அவர் கூட சாப்பிட்டார்... வெற்றி வெற்றி வெற்றி :-)

தேவையான பொரு‌ட்க‌ள்:-

ரவை - 1 கப்
பட்டாணி -
கேரட் -
பீன்ஸ் -
தக்காளி - 1/2
வெங்காயம் - 1/2
கொத்தமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
இஞ்சி, புண்டு விழுது
பச்சை மிளகாய் - நான்கு

செய்முறை:

#.பட்டாணி, பீன்ஸ், கேரட் கட்செய்து மைக்ரோவேவில் 2 நிமிடம் வேகவைத்து கொள்ள வேண்டும்.

#. ரவையை வெரும் கடாயில் 3 நிமிடம் வறுத்து கொள்ள வேண்டும்.



#.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பிறகு நறு‌க்‌கிய வெங்காயம், வதங்கியதும் இஞ்சிபுண்டு விழுது,த‌க்கா‌ளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.




#.மஞ்சள் பொடி,வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்.


#.பிறகு 2கப் தண்‌ணீர் சேர்த்து தேவையான அளவு உ‌ப்பு போ‌ட்டு கொதி‌க்க ‌விடவு‌ம்.



#.த‌ண்‌ணீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்தது‌ம், ரவையை போடவும். நன்கு கிளறி பிறகு வெந்தவுடன் கொத்தமல்லி மேலே துவி பரிமாறவும்.

#.சுவையான வெஜ் ரவா கிச்சடி தயார்.. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.



................................................

Comments

Menaga Sathia said…
very nice dish!!

pls see this link

http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html
Jerry Eshananda said…
அம்மா தாயி .... பசிக்குதே
Anonymous said…
lovely dish..
Anonymous said…
colorful dish
Check this one.
http://suganthiskitchen.blogspot.com
I tried many recpies from this.Good one
sangamithra
நன்றி மேனகா...விருந்துக்கும் :-)

ஜெரி ஈசானந்தா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...எவ்வளவு வேனும்னாலும் எடுத்து சாப்புடுங்க

நன்றி அம்மு மது

sangamithra நன்றி..கண்டிப்பா பாக்குரேன்.
இப்பதாங்க ரவா கிச்சடி செஞ்சு, நாளைக்கு போஸ்ட் போடறதுக்காக போட்டோ எல்லாம் எடுத்து வைச்சுட்டு வந்து தமிழிஷ் பாக்கிறேன். நீங்க அதே போட்டுருக்கீங்க. என்னோடது கொஞ்சம் மசாலா பொருள் சேத்து செஞ்சேன். நாளைக்கு போடறேன்.
Good one.
Deivasuganthi நன்றி :-)

உங்க குறிப்பை நான் ஆவலா எதிர்பாக்குறேன்...நான் குழந்தைக்காக மசாலா அதிகம் சேர்க்க மாட்டேன்.
GEETHA ACHAL said…
எங்கள் வீட்டில் எனக்கும் அவருக்கும் ரவா கிச்சடி மிகவும் விருப்பம்...

சதரணமாகவே, வீட்டில் உப்புமா செய்தாலும் அதில் தக்காளியாவது இருக்கவேண்டும் என்னவருக்கு..

சூப்பர்ப் குறிப்பு...