வெஜ் ஸ்பிரிங் ரோல்
சைனிஸ் ஸ்பிரிங் ரோல் நாம் வீட்லேயே எளிய முறையில் செய்யலாம்...குழந்தைகளுக்கா செய்ததால் காய்களை வனக்கினேன்... பெரியவர்களுக்கு எனில் அப்படியே கூட செய்யலாம்...நாமே வீட்டில் பேஸ்ட்ரி(Sheets)ம் தயாரிக்கலாம் ஆனால் கடையில் கிடைக்கும் இதை உபயோகித்தால் அதே போல இருக்கும்...வாங்க படங்களுடன் எளிய செய்முறையை பாக்கலாம்.
தேவையான பொடுட்கள்:-
முட்டை கோஸ்- 1/2 கப்
கேரட்- 1/2 கப்
பட்டாணி - 1/2கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 tsp
உப்பு, மிளகுதூள் தேவைக்கு
எண்ணெய்
ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets)
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:-
#.ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
#.பின் காய்களை எல்லாம் போட்டு வதக்கவும்.தேவைக்கு எற்ப உப்பு , மிளகுதூள் சேர்க்கவும்.
#.ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets) பிரிஜ்ஜில் இருந்து எடுத்தவுடன் ஒரு ஈரபடுத்திய டிஸ்யு பேப்பரை அதன் மேல் விரிக்கவும்...இல்லை எனில் உலர்ந்து விரும்.
#.மைதா மாவை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.ஒரு ஷீட்டை மட்டும் தனியே எடுக்கவும்.
#.காய்கறிகலவை நன்கு ஆறியபின் பேஸ்ட்ரி ஷீடில் ஒரு டேபிள் ஸ்பூன் காய் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல் மாதிரி சுற்றவும்.
#. அதன் முனையை மைதா பேஸ்டில் ஒட்டவும்.
#.பிறகு கடாயில் எண்ணெய் வைத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்கவும்.
#. வெஜ் ஸ்பிரிங் ரோல் தயார்.கெச்சபுடன் பறிமாறவும்.
................................................
Comments
அன்புடன்,
அம்மு.
#.அப்படியா ஜலீலா அக்கா...நானும் நிரைய போட்டோஸ் வைச்சுட்டு போட நேரம் கிடைக்காமே அப்புரம் அதை மறந்தே போயிடுவேன்.:-)
#.நன்றி மேனகா :-)
#.நன்றி அம்மு.. ஹர்ஷினிய்யும் சைனிஸ், தாய் எல்லாம் சாப்பிட போனால் இதை மட்டும் தான் சாப்பிடுவா...ஒரு தடவை ட்ரை செய்து பாருங்க அப்புறம் வெளியே சாப்பிடவே மாட்டீங்க.:-)