இன்று என்னவருக்கு பிறந்தநாள்...சரி நம்மலே எதாவது கேக் பன்னலாம்ன்னு அவரை கேட்டால் அருக்கு பிளாக் பாரஸ்ட் கேக்தான் பிடிக்கும்னாரு...ம்ம்ம் சரி அவரோட தலையொழுத்து என்ன பன்னமுடியும் நானும் ஏதோ செய்தேன்...இதற்க்கு விஃப்கீரிம்மும்..எளிமையான பொருட்களையும் வைத்து செய்தேன்.
தேவையான பொருட்கள்:-
சாக்லெட் கேக்-1
(நான் ரெடி மிக்ஸ் உபயோகித்தேன்.)
சக்கரை-1 கப்
தண்ணீர் -2 கப்
டின் செஃரி
விஃபகீரிம்
செய்முறை:-
*.முதலில் சாக்லெட் கேக் பேக் செய்து ஆறவிடவும்.
*.2கப் தாண்ணீர், 1 கப் சக்கரையையும் சேர்த்து சக்கரை கரைந்து கொதிக்கும் போது இறக்கினால் சுகர் சிரப் தயார். இதையும் கொஞ்சம் ஆறவிடவும்.
*.கேக்கை 3 பாகங்கலாக வெட்டிக்கொள்ளவும்.
*.முதலில் ஒரு கேக் வைத்து அதன் மேல் சுகர் சிரப்பை ஒரு ஸ்பூனால் கேக் முலுவதும் இருக்குமாரு லேசாக ஊற்றவும்.
*.அதற்க்கு மேல் கொஞ்சம் விஃப்கீரிம் பூசவும்.
*.விப்கீரிம் மேல் செஃரியை கட் பன்னி போடவும்.
*.அதக்கு மேல் அடுத்த லேயர் கேக் வைத்து லேசாக அழுத்தவும்.
*.அதிலையும் சுகர் சிரப்,விப் கீரிம், செஃரி என அழங்கரிக்கவும்.
*.அதற்க்கும் மேல் 3வது லேயர் கேக் வைத்து...சுகர் சிரப்,விப் கீரிம், செஃரி என விருப்பம் போல போடவும்.
*.கேக் தயார்
*.கேக்கை 2 மணி நேரம் ஃபிரிஜில் வைச்சுட்டு கட் செய்யவும்...அப்பதான் சுகர் சிரப் எல்லாம் எல்லா ஊறி செட் ஆகும்..வாங்க சாப்பிடலாம்.
..........................................
Comments
கேக் ரொம்ப அழகாவும்,சூப்பராகவும் இருக்கு ஹர்ஷினி!!
தீபாவளிக்கு பிறகு இப்ப தான் பதிவா?
வாழ்த்துக்கள்.
உங்கள் கணவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மத்தபடி மன்னிச்சுக்கோங்க எனக்கு இந்த பிளாக் பாரஸ்ட் டேஸ்ட் ஏனோ பிடிக்கரதில்லே :((((((((
/அப்பாவிக்கு, நல்லவருக்கு, தியாகிக்கு, மனிதருள் மாணிக்கத்திற்கு /
ஏன் ஏன் இப்படி எல்லாம் இதை படிச்சுட்டு அவருக்கு சந்தோசம் தாங்களை....
எனக்கு கடையில் அவ்வளவா பிடிச்சது இல்லை அவருக்காக தான் சாப்பிட்டு இருக்கேன்..ஆனா நான் செய்தது நிஜமாவே ரொம்ப நல்லா இருந்தது. :-)
Cake looks good and send me my piece.
Sangamithra
இதே அன்போடும் அக்கறையோடும் எப்பவும் இருக்க எங்கள் ஆசிகள்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
அம்மா ஊரில் இருந்து வந்து இருப்பதால், நெட் பக்கமே வரமுடியவில்லை...
பிளாக் பராஸ்ட் கேக் சூப்ப்பர்ப்...நான் கூட நினைப்பது உண்டு...இது செய்வது கஷ்டம் ...நீங்கள் சுலபமாக செய்வதை சொல்லி கொடுத்து இருக்கின்றிங்க...
என்னவர் பிறந்தநாளும் அடுத்த மாதம் வரவிருக்கின்றது...உங்கள் செய்முறைபடி செய்து பார்க்கின்றேன்..
எனக்கு இந்த கேக் மிகவும் பிடிக்கும்.
Sangamithra உங்களுக்கு இல்லாததா...எடுத்துக்குங்க...எல்லா கேக்கும் அன்னைக்கே காலி.
துளசி கோபால் வாழ்த்துக்கும், ஆசிக்கும் ரொம்ப நன்றிங்க :-)
நன்றி திகழ் :-)
நன்றி கீதா...ஓஒ அப்படியா கீதா அம்மா நல்லா இருக்காங்களா?.. எப்பவுமே அவரோட பர்த்டேக்கு கடையில் வாங்கினாலும் நானும் தனியா ஒரு கேக் செய்துவிடுவேன்...நான் முதல் முறையா இதை ட்ரை செய்தேன் ரொம்ப சுவையா இருக்குன்னு அவரும் விரும்பி சாப்பிட்டார் எனக்கும் சந்தோசம். :-)