மலர் கொடி
ஹர்ஷினியை Library கூட்டிட்டு போன போது அங்கு ஒரு Flower Makking புத்தகம் இருந்தது சரின்னு அதை எடுத்துட்டு வந்து அதில் இருக்கும் பூக்களை செய்ய முயற்ச்சித்தேன்... வாங்க எப்படி பன்னறதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
கிரேப் பேப்பர்
கம்பி
கிரின் டேப்
பஞ்சு
பசை
செய்முறை:-
* முதலில் இலை வடிவத்தில் பச்சை பேப்பரை வெட்ட வைக்கவும்.
*.மஞ்சள் பேப்பரையும் இதழ் வடிவத்தில் வெட்டி அதன் பின் பக்கம் மெல்லிய கம்பியை பசை போட்டு ஒட்டவும்.
*.ஒரு கம்பியில் கொஞ்சம் பஞ்சை உருட்டிவைக்கவும்.. இந்த மாதிரி ஒரு பேப்பரை வெட்டி அதை கம்பியிம் மாட்டவும்.
*பின் இதழில் பசை தடவி பஞ்சுடன் ஒட்டவும்.மொட்டு போல வரும்.
*. வேரு கலர் ஒரு பேப்பரை ஜிக்ஜேக் வடிவத்தில் வெட்டி அதை பசை போட்டு ஒட்டவும்.
*.பின் பெரிய இதழ்களை இனைக்கவும்.
* 6 இதழ்களை இனைக்கவும்.
*.இதை போல கொஞ்சம் பெரிய பூக்கள். கொஞ்சம் மொட்டுகள்..இலைகள் எல்லாம் செய்தபின்..கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கவும்.
*மலர் கோடி தயார்.
................................................
Comments