மக்களே உஷார்

அவைவருக்கும் ஒரு முக்கிய செய்தி

மக்களே உஷார்

கொஞ்சம் நாட்களாகவே அங்கே இங்கே திருட்டு என பார்க்கும் போது ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது அதுவும் போன வாரம் டைம்ஸ்சில் வந்த கட்டுரை இந்தியர்கள் வீடாகவே திருடி இருப்பதும் அவர்கள் முக்கியமாக எடுப்பது 22 ct தங்க நகைகளை அதுவும் மெட்டல் டிடக்டர் வைத்து எடுப்பதும் படித்ததும் பயம் அதிகமானது... இரண்டு நாட்களுக்கு முந்தான் bank locker-ல் நகைகளை எல்லாம் வைத்தோம்.

நானனும் ஹர்ஹினியும் தினமும் மாலை 5 மணிக்கு வெளியே செல்வோம்..நாங்கள் திரும்ப வரும் போது தான் என் கணவரும் வீட்டுக்கு வருவார்....நேற்று நாங்கள் வரும் போது எங்கள் கதவு உடைபட்டு இருந்தது..ஒரு மணி நேரத்தில் வந்த எங்களுக்கு ஆச்சரியம்...நல்லவேளை எதுவும் திருட்டு போகவில்லை..எங்கள் அப்பார்மெண்ட் முன்னாலே இருப்பதால் கொஞ்சம் தப்பினோம். முன்னறையில் தான் லேப்டாப், கெமரா எல்லாம் இருந்தது.


911 - கூப்பிட்டோம் அவர்கள் வந்து பார்த்திவிட்டு எல்லா இந்தியர், சீனாகாரார்கள் வீட்டிலும் தான் அதிகம் நடந்து இருக்கிறது இன்னும் அடுத்த முறை கெமரா,லேப்டாப்,LCD Tv இதை எல்லாம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது ஜாக்கிறதையாக இருங்கள் என்றார்கள்...இதை படிக்கும் அனைவரும் கொஞ்சம் பாதுகாப்புடன் இருங்கள்.




................................................

Comments

GEETHA ACHAL said…
நன்றி...நிறைய எச்சரிகையுடன் தான் இருக்க வேண்டும்...நன்றி.
Menaga Sathia said…
நன்றி ஹர்ஷினி அம்மா.இங்கயும் அப்படித்தான் நடக்கிறது.நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது..
வேலையில்லாத்திண்டாட்டமா இப்படி எல்லாம் செய்ய தூண்டுகிறது?

எது எப்படியோ உசாரா இருங்க மக்கா!!!
ungkalukku onrum problem illaye?
அனைவருக்கும் நன்றி...

Suvaiyaana Suvai நன்றிங்க...நாங்க யாரும் அப்ப வீட்லே இல்லை...ஆனா அதுக்கு அப்புறமா வீட்டில் தனியா இருக்க பயமா இருக்கு :-(
Jaleela Kamal said…
ஆகா அங்கேயும் திருட ஆரம்பித்து விட்டார்களா?


ராஜ் சொன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டத்தால் தான் நடக்குது .

எல்லோரும் உஷாராக இருங்கள்.
எங்க அப்பார்ட்மென்ட்லயும் கொஞ்ச நாள் முன்னாடி நிறைய நடந்தது.இப்ப அவ்வளவா இல்லைன்னு நினைக்கிறேன். நம்ம முடிஞ்ச வரைக்கும் பத்திரமா இருந்துக்கனும்.