காரட் அல்வா
இது என்னுடைய ஸ்பெசல் பதிவு அதனால் எல்லாருக்கும் ஸ்வீட்.... நல்ல அரோகியமான சுவையான அல்வா... கராட் சாப்பிடதவங்க கூட இதை கண்டிப்பா சாப்பிடுவாங்க....செய்வதும் ரொம்ப எளிது...மற்ற அல்வா போல கை வலிக்க கிளறவேண்டியுது இல்லை.. உடனடியானவும் தயாரித்து விடலாம்.
தேவையான பொருட்கள்
துருவிய காரட்- 2 கப்
பால் - 2 கப்
சீனி -1/4 கப்
நெய் - 2 Tsp
முந்திரிப்பருப்பு
ஏலப்பொடி
செய்முறை:
#. பாலை காய்த்து வைத்து கொள்ள வேண்டும்.
#.ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுக்கவும்.
#.அதே பாத்திரத்தில் நெய் விட்டு காரட் துருவலை நன்றாக வதக்க வேண்டும்.
#.சிறிது நேரம் கழித்து பால் சேர்த்து 8 நிமிடம் நிதானமான சூட்டில் வேகவிடவும். அடிக்கடி கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
#.நன்றாகா கெட்டியாக வரும் நேரம் சக்கரையும் ஏலகாய் பொடி சேர்த்து 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
#.அல்வா திரண்டு சுருண்டு வரும்போது சிறிது நெய் முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய காரட் அல்வா தயார்.
...............................................
Comments
Sangamithra
மாமியார் வீட்டில் தக்காளி ஹல்வா, முந்திரி கீர்
எட்டு நிமிசத்தைக் குறைக்க மைக்ரோ வேவில் அஞ்சு நிமிசம் வச்சாப் போதும்.
நின்னுக்கிட்டுக் கிளறும் நேரத்தில் ரெண்டு பதிவைப் படிச்சோமா, பின்னூட்டம் போட்டோமான்னு இருக்கலாம்:-))))
சாப்பிடுமுன் வராஹின்னு ஒரு சாமிக்குப் படைச்சுட்டுத் தின்னுங்க.
மங்கையர் மலர்/அவள் விகடன் இப்படி எதோ ஒன்னுலே படிச்சேன்.
எல்லாம் ரெட்டா இருக்கணுமாம்:-))))
(சென்னை வாழ்க்கையில்தான் இதெல்லாம் கிடைக்கும். படிப்பேன் இரவு தூக்கம் வர்றதுக்காக)
*.Ammu Madhu நன்றி.
*.Sangamithra நன்றி.
*.ஜலீலா அக்கா நன்றி..பீட்ரூட்லையும் பன்னுவாங்களா!!!!..அடுத்த முறை ட்ரை செய்யரேன் அக்கா.
*.துளசி கோபால் நன்றிங்க....எங்க வீட்லே சுவீட் செய்யறதே சாமிக்கு படைக்கதான். :-)
*.வால்பையன் நன்றிங்க..இது என்னோட 150வது பதிவு அதான் உங்களுக்கு எல்லாம் அல்வா :-)