தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 tsp
சீரகம்- 1/2 tsp
கரம் மசாலா தூள்-1/4 tsp
மிளகாய்தூள் -1/4 tsp
தனியா தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மஸ்ரூம் -1 கப்
பட்டாணி -1/2 கப்
எண்ணெய் - 1 tsp
செய்முறை:-
*.வெங்காயத்தை வெட்டி கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
*.கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும் அரைத்த வெங்காயத்தை வதக்கவும்.
*.வெங்காயம் கொஞ்சம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாடை போக வதக்கவும்.
*அதன்பின் மிளகாய்தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,உப்பு, கரம்மசாலா தூள் எல்லாம் போட்டு வதக்கவும்.
*.எல்லாம் ஒன்ரு சேர வதக்கவும்.
*.பின் அரைத்த தக்காளியை போட்டு வதக்கவும்.
*.அது வதங்கியதும் வெட்டிய மஸ்ரூம்மை போட்டு வதக்கவும்...தண்ணீர் விட வேண்டாம் மிதமான சூட்டில் வதக்கவும்...மாஸ்ரூம் வெந்ததும் ..ஃபுரோசன் பட்டாணியை சேர்க்கவும்.
*.விருப்பம் இருந்தால் 2 tsp தேங்காய்பால் சேர்க்கலாம்
*.மஸ்ரூம் மட்டர் மசாலா தயார்...இது சப்பாத்தி நாண்க்கு ஏற்றது.
***********************************************
Comments
Thanks
Sangamithra