கொத்து பரோட்டா




நம்ம ஊருக்கு போனால் என்னவர் முதலில் ஆசைபடுவது ரோட்டுகடை கொத்து பரோட்டா... இதை தான் நாமும் வீட்டில் எளிதாக செய்யலாம்...வாங்க பாக்கலாம்.



தேவையானப் பொருட்கள்:-

பரோட்டா -4 (உதிர்தது)
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவைக்கு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரிமசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மல்லித்தழை நறுக்கியது - 1/2கப்



செய்முறை:-

*.வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

*.ஒரு அடிகணமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.




*.தக்காளி, மிளகாய், மசாலா தூள்கள், உப்பு அனைத்தையும் போட்டு வதக்கவும்.




*.வதங்கியதும் 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கவும்.




*.அதில் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து 1 முட்டையும் ஊற்றி பிரட்டிவிட்டு 2 நிமிடம் வைக்கவும்.




*.பின் குக்கி கட்டர் அல்லது தோசை திருப்பி எதாவது ஓரம் கூர்மையாக உள்ள டம்ளர் எதையாவது வைத்து பரோட்ட கலவையை கொத்தவும்.(யாரவது மேல் கோபம் இருந்தால் அவங்களை மனசுலே நினச்சுகுங்க).




*.சுவையான கொத்து பரோட்டா தயார்.





...........................................

Comments

Jaleela Kamal said…
ஹர்ஷினி ரொம்ப பிரமாதம் இது எப்பவுமே எங்க வீட்டில் ஸ்பெஷல் அயிட்டம்
நானும் இதே போல் முட்டை கொத்து பரோட்டாவும், வெஜ் கொத்து பரோட்டாவும் வாரம் ஒரு முறை சாப்பாடு கட்ட செய்வேன், இதன் சுவை, ம்ம் அருமையாக இருக்கும்

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள், என்ன என் பிலாக் பக்கம் ஆளையே காணும்.

கறி மசாலா என்பது ஏன் என்ன சேர்த்து இருக்கும். நான் மிளகாய்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தன் போடுவது
நன்ரி அக்கா...கறி மசாலா அம்மா குடுத்து விடுவாங்க அக்கா..அதில் மசாலா பொருட்கள் எல்லாம் சேர்ந்தது தான்

ஜலீலா அக்கா...ஹர்ஷின்யுடன் கொஞ்சம் பிஸி அவ டான்ஸ், ஸ்விம்ங் எல்லாம் போற அவளை ஸ்குலுக்கும், கிளாலுக்கும் கூட்டிட்டு போகவே நேரம் சரியா இருக்கு அக்கா.. இதுலே திருடன் பயம் வேற ஒவ்வொரு முறை வீட்டுக்குல்லே தனியா நுலையும் போது பயமா இருக்கு.:-(
எனக்கு பிடித்த கொத்துப்பரோட்டோ.கலர் ஃபுல் ஆக செய்து காட்டி இருக்கின்றீகள்
GEETHA ACHAL said…
பார்க்கும் பொழுதே அப்ப்டியே சாப்பிட தோணுது..சூப்பர்ப்..

வீட்டில் அனைவரும் நலமா...பயப்படாதீங்க ஹர்ஷினி அம்மா..
Menaga Sathia said…
அருமையான கொத்து பரோட்டா.
நன்றி ஸாதிகா அக்கா :-)
நன்றி கீதா....இப்பதான் செக்கியூர்ட்டி அலராம் எல்லாம் உபயோகிக்க ஆரம்பித்து இருக்கிறோம்...அதற்க்கு பிறகு என் தோழி வீட்டையும் ஒடைத்து விட்டார்கள்... அதனாலெ கொஞ்சம் பயமாதான் இருக்கு கீதா.
நன்றி மேனகா :-)
படங்கள பார்க்கும் போது கொத்து புரோட்டா அழகா சாப்பிட தூண்டும் விதமா இருக்கு :).

வாட்டர்மார்க் (@kathampam) செய்யப்பட்ட படங்கள் அருமை. என்ன மென்பொருள் உபயோகிக்கிறீங்க?
எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க!
எங்க வீட்டம்மாவும் இது நல்லா பண்ணுவாங்க.... :))
egg illaamal seyyalaama?
ம்ம்ம்...யம்மி... இதில் முட்டைக்கு பதில் (ஊரவைத்து பின்) வேகவைத்த கொண்டை(மூக்கு) கடலை, சிறிது முந்திரி பருப்பு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்...அருமையாக இருக்கும்.
Anonymous said…
we are going to have kuthuparotta on friday dinner.
Be safe.
Sangamithra

Why don't you move to gated community?
எல்லாருடைய கருத்துக்கும், ஓட்டுக்கும் ரொம்ப நன்றிங்க :-)

முட்டைக்கு பதிலாக குருமா அல்லது மசாலா குழம்பு எதையாவது 1/2 கப் சேர்த்தால் நல்லா இருக்கும்.
//Sangamithra

Why don't you move to gated community?//

gated community லே தாங்க இருக்கோம் :-)
செய்முறையையும் படங்களை பார்க்கும் போது இப்பவே பசிக்குதே.... நல்ல செய்முறை ஹர்ஷினி அம்மா நன்றி உங்களுக்கு... கலையின் நன்றியும் சேர்த்து...
Jawahar said…
என்னடா வழக்கமா கேபிள் சங்கர் போடற ஐட்டத்தை இவங்க போடறாங்களேன்னு வந்தேன். வந்தப்புறம்தான் நிஜ பரோட்டான்னு தெரிஞ்சது. போட்டோவை பார்க்கிறப்ப ஆசையா இருக்கு. ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

http://kgjawarlal.wordpress.com
ஹர்ஷினி எப்படி இருக்கிங்க? வாவ் நல்ல அருமையான அயிட்டம்.நானும் இதே போல் தான் அடிக்கடி செய்வேன். ரொம்ப சுலபமா செய்ய கூடியது.

ம்... ம்...கல்க்கிட்டிங்க.என் ஹஸ்பெண்டுக்கு ரொம்ப பிடித்தது.
19த் வெட்டிங் ஆன்வேர்சரி வருகிறது அன்று இதை செய்து அசத்திட வேண்டியது தான். அவசியம் செய்துட்டது சொல்கிறேன்.
விஜி இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

உங்க மைக்ரோவேவ் இனிப்புக்காக ஆவலா காத்துட்டு இருக்கேன்...சீக்கிரமா எல்லாம் போடுங்க.

நன்றி விஜி :-)
Menaga Sathia said…
ஹர்ஷினி உங்க கொத்து பரோட்டா செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இந்த குறிப்பை பார்த்து செய்து ரெசிபி போடபோகிறேன்.மிக்க நன்றி உங்களுக்கு!!
ஆகா எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த கொத்துப்பரோட்டா. ஹோட்டலில் டட்டட் டடடட டட்டட சத்தம் கேட்டாலே அந்த பக்கம் ஒரு ரௌண்ட் போயிட்டு வந்திடுவோம்ல.
Unknown said…
First time here. Romba nalla irukku!
என் குறிப்பை பார்த்து செய்ததில் எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி மேனகா. :-)

S.A. நவாஸுதீன் நன்றிங்க உங்க கருத்துக்கு...எங்க வீட்லே அவரும் அப்படித்தான் :-)

Divya Vikram வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)
ஹர்ஷினி ரொம்ப நல்ல குறிப்பு. நான் அடிக்கடி இதை பார்டி கெட் டு கெதரில் என்னை செய்ய சொல்லி விடுவாங்க. நான் ஒரோ தடவையும் புது மாதிரி மசாலா சேர்த்து செய்வேன். எப்பவும் காலியாயிடும். நல்ல குறிப்புப்பா.
Anisha Yunus said…
யப்பா...ஒரு நோன்பாளியோட ஆசையை தீர்த்து வச்சுட்டீங்க போங்க. நானும் ஊருக்கு போனா ஹோட்டல் லிஸ்ட்ல முதல்ல ஊத்தாப்பமும் அடுத்து கொத்து பரோட்டாவும்தான். எங்க வீட்டுக்காரருக்கு மைதான்னாலே ஆகாது. அதனால சப்பாத்தி துண்டுகளை போட்டு செஞ்சேன். பிரமாதமா வந்ததுப்பா. ரெம்ப நன்றி.