நம்ம ஊருக்கு போனால் என்னவர் முதலில் ஆசைபடுவது ரோட்டுகடை கொத்து பரோட்டா... இதை தான் நாமும் வீட்டில் எளிதாக செய்யலாம்...வாங்க பாக்கலாம்.
தேவையானப் பொருட்கள்:-
பரோட்டா -4 (உதிர்தது)
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவைக்கு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரிமசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
மல்லித்தழை நறுக்கியது - 1/2கப்
செய்முறை:-
*.வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
*.ஒரு அடிகணமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
*.தக்காளி, மிளகாய், மசாலா தூள்கள், உப்பு அனைத்தையும் போட்டு வதக்கவும்.
*.வதங்கியதும் 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கவும்.
*.அதில் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து 1 முட்டையும் ஊற்றி பிரட்டிவிட்டு 2 நிமிடம் வைக்கவும்.
*.பின் குக்கி கட்டர் அல்லது தோசை திருப்பி எதாவது ஓரம் கூர்மையாக உள்ள டம்ளர் எதையாவது வைத்து பரோட்ட கலவையை கொத்தவும்.(யாரவது மேல் கோபம் இருந்தால் அவங்களை மனசுலே நினச்சுகுங்க).
*.சுவையான கொத்து பரோட்டா தயார்.
...........................................
Comments
நானும் இதே போல் முட்டை கொத்து பரோட்டாவும், வெஜ் கொத்து பரோட்டாவும் வாரம் ஒரு முறை சாப்பாடு கட்ட செய்வேன், இதன் சுவை, ம்ம் அருமையாக இருக்கும்
நல்ல குறிப்பு வாழ்த்துக்கள், என்ன என் பிலாக் பக்கம் ஆளையே காணும்.
கறி மசாலா என்பது ஏன் என்ன சேர்த்து இருக்கும். நான் மிளகாய்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தன் போடுவது
ஜலீலா அக்கா...ஹர்ஷின்யுடன் கொஞ்சம் பிஸி அவ டான்ஸ், ஸ்விம்ங் எல்லாம் போற அவளை ஸ்குலுக்கும், கிளாலுக்கும் கூட்டிட்டு போகவே நேரம் சரியா இருக்கு அக்கா.. இதுலே திருடன் பயம் வேற ஒவ்வொரு முறை வீட்டுக்குல்லே தனியா நுலையும் போது பயமா இருக்கு.:-(
வீட்டில் அனைவரும் நலமா...பயப்படாதீங்க ஹர்ஷினி அம்மா..
வாட்டர்மார்க் (@kathampam) செய்யப்பட்ட படங்கள் அருமை. என்ன மென்பொருள் உபயோகிக்கிறீங்க?
Be safe.
Sangamithra
Why don't you move to gated community?
முட்டைக்கு பதிலாக குருமா அல்லது மசாலா குழம்பு எதையாவது 1/2 கப் சேர்த்தால் நல்லா இருக்கும்.
Why don't you move to gated community?//
gated community லே தாங்க இருக்கோம் :-)
http://kgjawarlal.wordpress.com
ம்... ம்...கல்க்கிட்டிங்க.என் ஹஸ்பெண்டுக்கு ரொம்ப பிடித்தது.
19த் வெட்டிங் ஆன்வேர்சரி வருகிறது அன்று இதை செய்து அசத்திட வேண்டியது தான். அவசியம் செய்துட்டது சொல்கிறேன்.
உங்க மைக்ரோவேவ் இனிப்புக்காக ஆவலா காத்துட்டு இருக்கேன்...சீக்கிரமா எல்லாம் போடுங்க.
நன்றி விஜி :-)
S.A. நவாஸுதீன் நன்றிங்க உங்க கருத்துக்கு...எங்க வீட்லே அவரும் அப்படித்தான் :-)
Divya Vikram வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)