மலாய் (ஃடோபு) கோப்தா
கோப்தாவுக்கு தேவையானவை:
பனீர் -1 கப்(நான் டோஃபு உபயோகித்துள்ளேன்)
உருளைக்கிழங்கு -1
பச்சைமிளகாய் - 3
சோளமாவு [corn flour] -2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
*.ஒரு பாத்திரத்தில் மசித்தகிழங்கு,பனீர், பச்சை மிளகாய்,ஒரு ஸ்பூன் மல்லித் தூள்,அரை ஸ்பூன் சீரகத் தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
*.உருண்டைகளை corn flour-ல் பிரட்டி வைக்கவும்.
*.அந்த உருண்டைகளை எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
Gravy-க்கு தேவையானவை:-
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
கொத்துமல்லி இலை
கெட்டியான பால் - 1/2 கப்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
*.வெங்காயத்தை 1/2 வெட்டி மைக்ரோவேவில் 1 நிமிடம் வேகவைத்து அரைத்து வைக்கவும்.
*.தக்காளியை வென்னீரில் போட்டு எடுத்து தோலை எடுத்துவிட்டு அரைத்து வைக்கவும்.(டின் தக்காளி விழுதையும் உபயோகிக்கலாம்)
*.ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சீரகம் போட்டு அதன் பின் அரைத்தவெங்காயம் போட்டு வதக்கவும்.
*.லேசாக கலர் மாறியதும்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாபொடி,உப்பு சேர்த்து வதக்கவும்.
* பின் தக்காளி விழுது 1/2தண்ணீர் எல்லாம் சேர்த்து கொதிக்க விடவும்.
*.மசாலா மிதமான தீயில் நன்கு கொதித்ததும் அரை கப் கெட்டியான பாலை மெதுவாக ஊற்றி கிளறி விடவும்.. அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். .இதற்க்கு கீரிம்பால் உபயோகித்தால் தான் நன்றாக இருக்கும்...ஆனா நான் ஃபேட்பிரி மில்க் தான் உபயோகித்தேன்...இதுவும் நன்றாக தான் இருந்தது.
*.பால் லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து கோஃப்தாக்களை கிரேவியில் சேர்க்கவும்.
*.சுவையான மலாய் கோஃப்தா தயார்.. இதற்க்கு சப்பாத்தி,நாண், ஜீரா-ரைஸ்,புலாவ் போன்ற உணவுகளுக்கு ஏற்றது.
.................................................
Comments
கொஃதாக்களை உருட்டி வைத்துள்ள விதம் அருமை
வாங்க என் பிலாக்குக்கு வந்து உங்கள் அவார்டை பெற்று கொள்ளவும்.
அப்பட்டியே என் பத்து பிடித்த பிடிக்காத பதிலையும்பார்த்துட்டு போங்க
vani
தமிழ்நெஞ்சம்
தமிழ்நெஞ்சம்