தேவையானப்பொருட்கள்:
மாம்பழம் விழுது - 1 கப்

ரவா - 2 tsp
பால்- 1/2 கப்
கண்டென்ஸ்ட் மில்க்- 1 கப் (condensed milk)
நெய் - 1/2 கப்
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
*.ரவாவையை லேசாக வறுக்கவும் (நிறம் மாறக்கூடாது) ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
*.கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில், மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
*.அதில் பால் சேர்த்து குறைந்த தணலில் வேகவிடவும்.
*பின்னர் அதில் பொடித்த ரவாவையும், கண்டென்ஸ் மில்க்க்கும் சேர்த்து நன்றாக கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும்.
*. அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறிவும்.
*.மாம்பழ அல்வா தயார்.
Comments
thanks
Thanks :-)