ரீக்கோட்டா ரசமலாய்
பொதுவா ரசமலாய் பாலை காய வைச்சு பன்னிர் செய்து அதை ரசகுலாவா செய்து அப்புறமா தான் செய்வாங்க ஆனா இது புது ஈசியான செய்முறை வாங்க பாக்கலாம்.
தேவையானவை.
ரீக்கோட்டா சீஸ் - 4 TSP
மைதாவாவு - 1/2 TSP
சக்கரை- 1/2 கப்
பால் - 1 கப்
செய்முறை:-
*ரீக்கோட்டா சீஸ்ஸுடன் மைதாமாவை சேர்த்து மிருதுவாக பிசையவும்.
*.சக்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
*.பாலை குறைந்த தணலில் வைத்து காய வைக்கவும்.
*.சீஸ் கலவையை சிரு உருண்டைகளாக்கி பின் கொஞ்சம் தட்டையாகவும் செய்யவும்.
*.உருண்டைகளை சக்கரை கலவையில் போட்டு வேகவிடவும்.
*.பால் சுண்ட காய்ந்ததும் அதில் ஒரு சிட்டிகை குங்குமபூ,சக்கரை சேர்க்கவும்.
*.வேந்த உருண்டைகளை பாலில் சேர்த்து 5 நிமிடம் வேந்தபின் இறக்கவும்.
*.ரசமாலாய் தயார் ...மேலே பிஸ்தாவை உடைத்து அலங்கரிக்கவும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Comments
இது இன்னும் யோலோயிஷா வந்தா பார்க்க நல்ல இருக்கும், கிரேடடு பிஸ்தா தூவினால் இன்னும் ரிச்சாக இருக்கும் அடுத்த முறை செய்து பாருங்கள்
மேலே பிஸ்தா தூவி இருக்கேன்...நல்லா பாருங்க அக்கா
இந்த கப்பை இங்கே சாஸ்,கிரேவி எல்லாம் தர ரெஸ்டாரண்டில் பயன் படுத்துவாங்க....உங்க ஞாபகமும் சரிதான்க்கா எனக்கும் அப்படி தான் தோனும். :-)
நானும் ரிக்கோட்டா சீஸ் அடிக்கடி வாங்குவேன்..கண்டிப்பாக உங்கள் செய்முறைபடி செய்து பார்கிறேன்..