குழத்தைகளுக்கு எவ்வளவு தான் கடையில் பொம்மைகள் வாங்கி கொடுத்தாலும் நாமே எதாவது செய்து குடுத்தால் அவங்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் கிடைக்கும்.. நமக்கும் ஒரு மகிழ்ச்சி தானே...வாங்க ஃபோம் எரும்பு எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
ஃபோம் பால்
ஸ்ட்ரா
கண்கள்
ஸ்ட்ராவின் வளைக்கும் பகுதிக்கு அரை இன்ச் இடம் விட்டு இரண்டு பக்கத்திலும்(படத்தில் உள்ளது போல்) வெட்டி வைக்கவும்.
இரண்டு ஸ்ட்ராவை மட்டும் ஒரு பகுதி கொஞ்சம் நீளமாக வெட்டவும்...இது தலை பகுதியில் வைப்பதற்க்கு.
எல்லா ஸ்ட்ராவையும் லேசாக வளைத்து வைக்கவும் .
அதன் ஒரு பகுதியில் ஃபோம் சின்ன உருண்டையை கம் போட்டு ஒட்டவும்.
ஃபோம்பால் தலை ,உடல் என கற்பனைக்கு ஏற்ப ஒட்டவும்...தலை பகுதியில் கண்களை இனைக்கவும்.
பின் கால்கள், தலையில் கொம்பு இனைக்கவும்.
இதே போல விரும்பிய வண்ணத்தில் வித விதமான செய்து அசத்துங்கள்.
***********************************************
Comments
பிரமிப்பா இருக்கு, படிக்க பார்க்க :)
பிரமிப்பாக இருக்கிறது உங்களின் கைவேலைகள், குழந்தைகள் ஆர்வமாக கற்று கொள்கிறர்கள், நன்றி உங்களின் வலைத்தளத்தினை இன்று தான் கேள்விப்பட்டு வருகை செய்தேன் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி !