ரீக்கோட்டா ஜாமுன்
என் கல்கத்தா தோழி ஒருவரிடம் கற்றுக்கொண்ட ஜாமுன் இது ...மிகவும் சுவையாக இருக்கும்...எல்லாருக்கும் ஜாமுன் பிடிக்கும்...ஆனால் இந்த ஜாமுன் அதைவிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
ரீக்கோட்டா சீஸ் -1/2 கப்
பேன்கேக் மிக்ஸ் - 1கப்
மில்க் பவுடர் - 1கப்
எண்ணெய்
சக்கரை பாகுக்கு:-
சக்கரை -1 கப்
தண்ணீர் - 3/4 கப்
ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை
சிவப்பு கலர் - ஒரு துளி
செய்முறை:-
@.ரீக்கோட்டா சீஸ்,பேன்கேக் மிக்ஸ்,மில்க் பவுடர் சேர்த்து பிசையவும்,தண்ணீர் விட தேவையில்லை.
@.தேவையான அளவுகளில் உருட்டி வைக்கவும்.
@.சக்கரை , தண்ணீர் சேர்த்து ஒரு பாகுகாய்ச்சவும்..சக்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்தூள்,ரெட் கலர் சேர்த்தால் பாகு தயார்.
@.உருண்டைகளை மிதமான சூட்டில் பொறித்து எடுக்கவும்.
@.பொறித்த உருண்டைகளை சூடான பாகில் போட்டு 10 நிமிடம் ஊற விடவும்.
@.மிகவும் சுவையான ஜாமுன் தயார்.
.................................................
Comments