கோதுமை அப்பம்
கோதுமை அப்பம் என் மாமி எண்ணெயில் சுட்டு எடுப்பாங்க.. ரொம்ப சுவையாக இருக்கும் அதையே எண்னெய் குறைவாக டயட் அப்பம் இது ...ஆனாலும் கொஞ்சம் அதே சுவையில்.
தேவையான பொருட்கள்:
கனிந்த வாழைப்பழம் - 2
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
செய்முறை:-
#.முதலில் வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.
#.வெல்ல கரைசலில் வாளை பழத்தை மசித்து சேர்க்கவும்.
#.வெல்ல கலவையில் மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
#.இட்லி மாவின் பதத்திற்க்கு மாவை கலக்கி வைக்கவும்.
#.பனியாரக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் அல்லது ஆயில் ஸ்பிரே செய்தபின் மாவை ஊற்றி அளவான தனலில் வைத்து வேகவிடவும்
#பணியாரம் (அப்பம்)தயார்.
என் மாமி இதில் தேங்காய் சேர்த்து செய்ததில்லை நம்ம மேனகா குறிப்பை பார்த்து கொஞ்சம் தேங்காயும் கலந்து செய்ததில் மிகவும் சுவையாக இருந்தது.
நன்றி மேனகா
Comments