சாக்லேட் கப் கேக்




சாக்லேட் கப் கேக்


இது முட்டை இல்லாமலல் செய்யும் சாக்லெட் கப் கேக்.பழம் சேர்த்து செய்வதால் நல்ல பஞ்சு போல இருக்கும் ...அதுலையும் கொக்கோ பொடியும் சேரும் போது வாழைப்பழம் சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கவே முடியாது சாக்லேட் கேக் போலவேதான் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

மாவு- 2 கப்
சக்கரை-1, 1/3 கப்
baking powder -2 tsp
கொக்கோ பவுடர்- 2/3 கப்
வாளைபழம் -2
வென்னிலா எசன்ஸ்-1 tsp
தண்ணீர் -1, 1/2 கப் (வெது வெதுப்பான நீர்)
1/2 cup வெண்ணெய் (unsalted butter)or -oil 1/4 cup



செய்முறை:-

@.வாளை பழத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
இப்படி இருந்த பழத்தை


இப்படி ஆக்கவும்


@ ஒரு பாத்திரத்தில் , மாவு,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர் எல்லாம் சேர்த்து கலந்து தனியாக வைக்கவும்.



@ இன்னொரு பாத்திரத்தில் , உருக்கிய வெண்ணொய் (அல்லது எண்ணெய்),சக்கரை, வென்னிலா, வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சக்கரை கரையும் வரை கலக்கவும்.


@.பின் அதனுடன் அரைத்த பழம் விழுதையும் சேர்க்கவும்.


@.பின்பு இந்த நீர் கலவையை மாவு கலவையில் சேர்த்துக்கவும்.


@.இந்த கலவையை கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும்.



@ கப் கேக் ட்ரேயில் பேப்பர் கப் வைத்து அதன் மேல் கொஞ்சம் ஆயில் ஸ்ப்ரே அடிக்கவும்.


@மாவை முக்கால் பாகம் வரும் வரை நிறப்பவும்....அல்லது ஒரு ஸ்குப் விடவும்.


@.350 *F -ல் 25 நிமிடம் பேக் செய்யவும்.


சுவையான சாக்லேட் கப் கேக் தயார்



குறிப்பு:-இதை அலங்கரிப்பது அடுத்த பதிவில்.

..............................................

Comments

vanathy said…
looks very yummy!
Menaga Sathia said…
உங்களை தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன்.தொடரவும்.

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_17.html
Kavi.S said…
ஹாசினி கேக் பார்க்கவே சூப்பரா இருக்கு,ம்ம்ம்ம்ம்ம்...
வீட்டில இருக்கறவங்க ஐயோ கேக்கா அப்படினு அலறும் வரை விட மாட்டேனு, ஏதவாது சபதம் செய்திருக்கீங்களா:)

ஹாசினி வாளைப்பழம் இல்லை வாழைப்பழம்தான் வரும்'னு நினைக்கிறேன்:)
Kavi .S எப்படிபா கண்டுபிடுச்சீங்க.. கேக்ன்னாலே அய்யோ நான் டயட்-ன்னு எல்லாரும் ஓடிட்ராங்க...ஆமா நீங்க எப்ப எங்க வீட்டுக்கு வர போறீங்க..???

பிழையை திருத்திவிட்டேன்.. நன்றிப்பா :-)
நான் வேறு விதமாக் செய்வதுண்டு. இமுறையை,முயற்சித்துபார்கிறேன்.
நன்றி